Re:...மனசே RELAX PLEASE .. posted bymackie noohuthambi (chennai)[06 October 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37625
வங்கிகள் சுமார் ஒரு வாரத்துக்கு செயல்படாது எனபது முன்கூட்டியே எல்லோருக்கும் தெரியும். 30 செப்டம்பர், 1 அக்டோபர் வருஷ கணக்கு பார்க்கும் நாட்கள் வங்கிகளில் வரவு செலவு செய்ய முடியாது. 2 காந்தி ஜெயந்தி. 3 சரஸ்வதி பூஜை 4 சனிக்கிழமை, 5 ஞாயிற்றுக் கிழமை, 6 பக்ரித் - இவ்வளவு நாட்களும் வங்கிகள் விடுமுறை நாட்கள். வரவு செலவு செய்ய முடியாது. இதனை நாட்களுக்கு காயல்பட்டினத்தில் உள்ளவர்கள் atm மில் பணம் எடுக்க
ஊரில் ICICI 3 இடங்கள், SBI , CBI , IOB ,TMB மொத்தம் 7 ATM கள் உள்ளன. இவ்வளவிலும் எவ்வளவு பணம்தான் உட்செலுத்த முடியும். மக்கள் எல்லோரும் atm இருக்கிறது என்ற தைரியத்தில் இருந்து விட்டோமே தவிர இவ்வளவு லீவு நாளில் ஒரு atm மில் புதிதாக பணம் போடமாட்டார்கள், எடுக்கத்தான் செய்வார்கள். இதை நாம் முன்கூட்டி அறிந்திருந்தால் எச்சரிக்கையாக இருந்திருப்போம். வங்கிகள் இதை முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். ஒரேஅடியாக இப்படி மொத்தமாக 6 நாள்கள் லீவு வந்தது பெரும் இடைஞ்சல்தான்.
துபையிலிருந்து நண்பர்கள் எங்களுக்கு இந்த தகவலை சொல்லி எச்சரித்து இருந்தார்கள். அதனால் மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
ஒரு வேளை இப்போது தமிழகத்தில் நடக்கின்ற உண்ணாவிரதங்கள் கடை அடைப்புகள், பேருந்து நிறுத்தம், பள்ளிக்கூடம் பகிஷ்கரிப்பு என்று தொடரும் செய்தியுடன் வங்கி ஊழியர்களும் தங்கள் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் 7 - 8 திகதி கூட லீவு வரலாம். அதன் பிறகு சனி ஞாயிறு என்று மறு லீவு இருக்கும். உலகிலேயே லீவு நாட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாதான். அதிலும் நமது முதல்வருக்கு ஏற்பட்ட இழப்புக்கு தமிழகமே லீவு எடுத்துக் கொண்டதுபோல் இருக்கிறது.
ஒரு மாணவனிடம் உனக்கு யாரை அதிகம் பிடிக்கும் என்று ஆசிரியர் கேட்கிறார். அதற்கு அவன் "எனக்கு வானிலை அறிக்கை சொல்லும் ரமணனை பிடிக்கும்" என்று பதில் சொல்கிறான். "அது என்ன அவரை பிடிக்கிறது?" ஆசிரியர் கேட்கிறார். மாணவன் சொல்கிறான், "அவர்தான் எப்போது மழை பெய்யும் என்று சொல்கிறார், மழை பெய்தால் பள்ளிக் கூடம் விடுமுறை விடுவார்கள், ஜாலிதானே, அதனால்தான் அவரை பிடிக்கும்".
இப்போது சொல்லுங்கள், நமக்கு லீவு தேடித்தரும் எல்லாரையும் பிடிக்கும், தமிழக முன்னாள் முதல்வர் உள்பட....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross