செய்தி: ஹஜ் பெருநாள் 1435: தமாம், ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா காயலர்களின் தியாகத் திருநாள் தேனமுத சுற்றுலா யான்போவில் சங்கமம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சவுதி அரேபியா ரொம்பதான் மாறிப் போச்சி.. posted bymackie noohuthambi (chennai)[09 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37652
ஒரு காலம் இருந்தது. வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது தேநீர் குடிக்க காசு இருக்கிறதோ இல்லையோ, உடலில் நடப்பதற்கு வலு இருக்கிறதோ இல்லையோ கையில் இகாமா கட்டாயம் இருக்க வேண்டும். தப்பி தவறி மறந்து விட்டோம், அவ்வளவுதான், காவல் துறை சிவப்பு நீல வண்ண சொகுசு கார் நமது கண்களில் பட்டால் போதும் நம்மை அறியாமல் நமது கைகள் நமது பாக்கெட்டை தொட்டுப் பார்க்கும். உயிர் போய் உயிர் வந்தது போல் இருக்கும். சோலை வனங்கள் நமக்கு கிட்டாத பாலை வனங்கள்.. பெண்கள் தான் போக வேண்டும், அதுவும் சவூதிகள்தான் போக முடியும். எப்போதும் பூட்டியே இருக்கும்.
இந்த மரண பயத்துடன்தான் காயல்நல மன்ற கூட்டங்கள் ஏதோ ஒரு சிறையில் நடப்பதுபோல் - இப்போது நாளிதழ்களில் பரப்பாக பேசப்படும் பெங்களூர் பரப்பரா அக்ரஹாரம் போல - அங்கே இருப்பது போன்ற ஒரு வெறுமை கலந்த போலி சந்தோஷம். நாம் இந்தியாவில் எவ்வளவு சுதந்திரமாக வாழ்ந்தோம். இப்போது இப்படி அடிமை போல் இருக்கிறோமே என்ற கவலை -துயரம் நம்மை ஆட்கொள்ளும். நண்பர் ஆதம் சுல்தான் எனது இனிய பொது செயலாளர் அவர்களுக்கு இந்த விஷயங்கள் நன்கு தெரியும்.
ஆனால் இப்போது நிலைமை முற்றிலுமாக மாறி இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - திறந்த வெளியில் காயல் களரி அறுசுவை உணவு. அல்லாஹ்வை ஷுக்று செய்யுங்கள். நீங்கள் இருப்பது பொன்னான காலம். கொடுத்து வைத்தவர்கள். இதையும் மீறி யாருக்காவது மன கஷ்டங்கள் இருந்தால் எங்கள் காலங்களை நினைத்து திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்.
"புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூ மழை பொழிகிறது
எந்த நாடு என்ற கேள்வி இல்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை"
என்று பாட தோன்றுகிறது.
எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross