செய்தி: ஹஜ் பெருநாள் 1435: தமாம், ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா காயலர்களின் தியாகத் திருநாள் தேனமுத சுற்றுலா யான்போவில் சங்கமம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கெடுபிடிகளை கடந்துவந்த வாழ்க்கைப்பயணம்! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 October 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37657
சுமார் 25 வருசத்திற்கு முன் ரியாதில் நான் இருக்கும்பொழுது காயல் மன்ற கூட்டம் எந்த ஒரு தனி வீட்டிலும் நடத்த முடியாது பொது இடத்தில உட்க்காரும் இடமான பூங்காவில் (PARK) பயந்து பயந்து நடத்தி இருக்கிறோம் ஒரு தடவை தமாமிலிருந்து நண்பர்
A .R .தாஹா கூட கலந்து இருக்கிறார் (அவர் இந்த செய்தியைப் பார்த்தால் நினைவுக்கு வரும் )அந்த அளவிற்கு அப்போதிருந்த சட்ட்திட்டத்திற்கும் காவல்துறைக்கும் பயந்து கொண்டு மிகவும் கவனமாக கூட்டங்கள் நடத்தி நம்மூர் வரிய மக்களுக்கு, வதங்கும் மக்களுக்கு,வறுமை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு வெறித்தனம் எங்கள் எல்லோர்களின் மத்தியிலும் இருந்ததென்று சொன்னால் அது மிகையல்ல!
நம் KMT மருத்துமனைஉருவாக நன்கொடைவசூல்
பண்ணுவதில் தீவிரம் காட்டிய காலத்தில் சுமார் 500 கி.மீ தொலைவிலுள்ள் ஒரு ஊரில் ஒரு தோட்டத்தில் நம்மூர் மக்கள் நிறைய இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களிடம் வசூல் பண்ண ஒரு வெளிக்கிழமை என் காரில் ஒரு குழுவாக சென்றோம். அப்போதெல்லாம் ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு செல்வதென்றால் அலுவலக அனுமதி முத்திரை கடிதம் வேண்டும். அக்கடிதம் இல்லையென்றால் காவல்துறை பிடித்து விடும் நாங்கள் ஆர்வ கோளாறினால் அவசரமாக புறப்பட்டு விட்டோம். நம்மூர் மக்களிடம் வசூல் செய்துகொண்டு இருக்கும்பொழுது ஒரு காவல்துறை காவலாளி வந்து என்னை பிடித்து இது யாருடைய கார் என்றார் என்னுடையது என்றேன் எங்கிருந்து வருகிறீர்கள் எங்கே உங்கள் அன்மதி கடிதம் என்று வினவவே, என் தம்பிக்கு சுகவீனம் சற்றுஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வந்ததால் உடனே புறப்பட்டு வந்தோம் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாங்கள் அனுமதி கடிதம் பெறமுடியாது என்று சோகமே உருவான முகத்துடன் பாதி அழுகை வருவதுபோல் பாவனை செய்தோம்.பெரிய அதிகாரியிடம் என்னை கூட்டி சென்று விட்டு விட்டார் பெரிய அதிகாரி அன்ற மாலைதான் வந்தார். வந்தவர் என்னை விசார்த்தார் என் அலுவலக பெயரையும் மற்றைய விபரத்தையும் கேட்டுவிட்டு சற்று எச்சரித்து எங்களை விவ்டுவிதார் அந்த அனுபவம் இன்றுவரை எங்கள் மனதை விட்டு அகலவில்லை.
நான் என்றும் மதிக்கு சகோதரர் மக்கி நூகுதம்பி காக்கா அவர்கள் கருத்து பதிவில் "பெங்களூர் பரப்பரா அக்ரஹாரம் போல - அங்கே இருப்பதுபோன்ற ஒரு வெறுமை கலந்த போலி சந்தோஷம்("c&p) என்ற அளவிற்கு ஒப்பிட தேவையில்லை,கெடுபிடிகள் கடினம்தான் ஆனால் அதுவே பெங்களூர் பரப்பரா அக்ரஹாரம் சிறைகள் போன்றோ அல்லது திகார் சிறைகள் போன்றோ ஒரு
குற்றவளிக்கொப்பான வாழ்கையை நாங்கள் வாழவில்லை
அப்படிப்பட்ட இழிநிலை சிறை வாழ்கை நம் அனைவருக்கும் அணுவளவும் அணுகாமல் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் புரிவானாக ஆமீன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross