சொல்லுங்கள் நடுநிலை நெஞ்சமுடையவர்களே ?. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[11 October 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37664
ஒரு பேரூந்தில் பயணம் செய்ய பயண சீட்டு பெற முனைபவரிலிருந்து,பெரிய அரசாங்க அலுவலகத்தில் தன்னுடைய காரியம் முடிவடைய எத்தனிக்கும் சாதாரண சாமானியன் முதல் சமூகத்தில் உயா அந்தஸ்தில் இருப்பவர்கள் வரை,ஏதாவதொன்றை இலைமறையாய்க் கொடுத்துத்தான் தங்கள் தேவைகளையும்,தங்கள் காரியங்களையும் முடித்துக் கொள்கிறார்கள். இதில் 99% சதவீததினர்கள் நம்முடைய நெஞ்சைத் தொட்டுப் பார்த்தால் நாமே உணரக்கூடியவராவோம்!
ஆக இது எதார்த்தம் இதுதான் இந்தியாவின் வாழ்க்கைமுறை இதை பெரிதாகச்செய்பவன் பிடிபடுகிறான்.அவன் பலராலும் நிந்திக்கப்படுகிறான், நிந்திப்பவன் கூட தன் நிலையை நினைக்காமல் நேர்மையானவனைப்போல நடிக்கிறான்! .
ஆக இந்த வாழ்க்கைமுறை தவிர்க்கமுடியாத சங்கிலித் தொடாராக பழகிப்போய்விட்டது.இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு ஆட்சியானதோ
ஆளும் முதன்மையோ தங்களின் ஆட்சித்திறனை மக்கள் மத்தியில் கூறி முந்திய ஆட்சியாளர்களிடமிருந்து ஒப்பிட்டுக்காட்டி,நான் பொன்னான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கிறேன் என்று மக்களிடம் முறையிட்டு அவர்கள் மனதை கவர முயற்சசித்தால்,உண்மையிலேயே நடுநிலையான மக்கள் முதல் அனைத்து மக்களும் ஆதரவை அள்ளித்தருவார்கள்
அதை விட்டு விட்டு முந்திய ஆட்சியாளர்கள் ஊழல புரிந்து விட்டார்கள்,கோடான கோடியை கொள்ளையடித்து விட்டார்கள் ஆகவே அவர்களை இங்கு அண்ட விடாதீர்கள், அவர்கள் சிறைக்கம்பிக்கு சொந்தக்காரர்கள் என்று மக்க்களிடம் கூறி,கூறி ஆட்சியைப்பிடித்த அந்த தலைமை அதே ஊழலில் தண்டனை பெரும்பொழுது,அதை விமர்சிக்க சாதாரண கடைக்கோடி சாமானியனும் முன்வரத்தான் செய்வான்.அவன் சிறுதவறு செய்திருந்தாலும் அதை நினைக்க மாட்டான் ஆட்சியாளரின் முதன்மையே இப்படி செய்யலாமா?ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னதால் அல்லவோ அவர்களுக்கு ஓட்டளித்தேன் என்று எண்ணுபவன் அத்தலைமையை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது..
இதையெல்லாம் மறந்து மனித புணிதம் என்றும், தெய்வத்திற்கு மனிதன் தண்டனை தீர்ப்பு வழங்கலாமா?என்றும்,நீதி வழங்கிய நீதிபதி நீசமுடையவன் என்றும் மாநிலத்தில் எல்லா இடங்களிலும் இவர்களின் நிலைபாட்டை தெர்வித்து, இல்லை இல்லை திணித்து எல்லா மக்களையும் மிரட்டி எதிர்ப்பணியில் இணையுங்கள் இல்லையெனில் உங்கள் நிர்வாகநிலையங்களின் நிர்வாக குரல்வளயங்கள் நெருக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப் படுவீர்கள் என்ற சர்வாதிகார ஆட்டதைப்பார்த்துக்கொண்டு, அதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் அனைத்தும் மக்களால்தான் செய்யப்படுகிறது என்பதை ஒப்புகொள்ளுங்கள் என்று சொல்வது கேப்பையில் நெய்வடிகிறது என்ற சொல்லுக்கு ஒப்பானது இல்லையா? சொல்லுங்கள் நடுநிலை நெஞ்சமுடையவர்களே ?அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross