நமது முஹல்லா குருவித்துரைப் பள்ளி புதிய நிர்வாகத்திற்கு எனது நல்வாழ்த்துக்களையும் , இனிய சலாமினையும் , துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! السلام عليكم ورحمة الله وبركاته
இதுவரையிலும் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக !
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் நமது பள்ளி எந்த பாரம்பரிய கொள்கையை வாழையடி , வாழையாக பின்பற்றி வருகிறதோ , நமது ஆபாக்கள் எந்த நல்வழியை காட்டிச் சென்றார்களோ அத்தகைய " அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் " கொள்கை , கோட்பாடுகளை அணுவளவும் பிசகி விடாமல் , தொடர்ந்து அந்த சீரான பாதையிலேயே பயணித்து வர வல்ல நாயன் நல்லருள் புரிவானாக !
இந்த பள்ளிக்கு யாரெல்லாம் உடல் , பொருள் , ஆவி , நிதியாக , நிலமாக , வக்ஃபாக ரகசியமாகவும் , பரகசியமாகவும் வாரி வாரி வழங்கினார்களோ அத்தகைய நல்லடியார்களுக்கு அவர்களில் மறைந்தவர்களுக்கு அன்னாரின் மண்ணறைகளை ஒளிமயமாக்கி சுவன சோலையாக்கி நாளை மறுமையில் மஹ்மூத் மாநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் சபாஅத்திற்கு உரித்தாகி ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த பதவியை வழங்குவானாக ! ஆமீன் !
இப்பள்ளியில் சன்மார்க்கப் பணிபுரிந்த இமாம்கள், முஅத்தின்கள், நிர்வாகிகள், துப்பரவாளர்கள் நோன்பு தராவீஹ் தொழுகை ஏனைய சன்மார்க்க நிகழ்சிகள் யாவற்றிலும் கலந்தவர்கள் , பங்காற்றியவர்கள் அதற்கென பொருளாதார உதவி செய்தவர்கள் என சகல பேர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் பேரருளை சொறிவானாக !
இந்த இறையில்லத்திற்கு இதுவரை உதவியர்கள் , உதவிக் கொண்டிருப்பவர்கள் , உதவ இருப்பவர்கள் என அனைவருக்கும் அல்லாஹ் ஈருலக சகல நன்மைகளையும், ஈமான் சலாமத்தையும் , நோயற்ற வாழ்வையும் , நீண்ட ஆயுளையும் , குறைவற்ற செல்வதையும் வாரி வாரி வழங்குவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross