காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி பொதுக்குழுக் கூட்டத்தில், பள்ளிக்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், நடப்பு நிர்வாகத்தின் பொறுப்புக் காலம் நிறைவடைந்துள்ளதையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் பள்ளி வளாகத்தில், இம்மாதம் 12ஆம் நாள் 20.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் - பள்ளியின் நடப்பு தலைவர் (பொறுப்பு) நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ - ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி சொற்பொழிவாற்றினார்.
பள்ளியின் - காலமான தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டதுடன், அன்னாரின் மஃபிரத் – பாவப் பிழை பொறுப்பிற்காக துஆ ஓதப்பட்டது. முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துஆ இறைஞ்சினார்.
பள்ளியின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, நடப்பு இணைச் செயலர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் சமர்ப்பித்தார். கூட்ட நாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை இணைச் செயலர் எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் சமர்ப்பித்தார்.
பள்ளியின் நடப்பு நிர்வாகத்தின் பொறுப்புக் காலம் நிறைவடைந்துள்ளதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாகம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1 - இரங்கல் தீர்மானம்:
கடந்த பல வருடங்களாக நமது பள்ளியின் தலைவராக இருந்து, திறம்பட பணியாற்றிய மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ மறைவுக்கு இக்கூட்டம் இரங்கல் தெரிவிப்பதோடு, அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துஆ ஓதினார்.
தீர்மானம் 2 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
பள்ளியின் நடப்பு நிர்வாகிகளின் பொறுப்புக் காலம் நிறைவடைவதையடுத்து, புதிய நிர்வாகிகள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:-
தலைவர்:
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்
துணைத்தலைவர்:
ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத்
இணைச் செயலாளர்கள்:
(1) ஹாஜி எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ்
(2) ஹாஜி கே.எஸ்.முஹம்மத் நூஹ்
(3) ஹாஜி கே.எம்.செய்யித் அஹ்மத்
தீர்மானம் 3 - செயற்குழு உறுப்பினர்களாக 20 பேர்...
தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நிர்வாகிகள் தவிர்த்து, கூடுதலாக 20 பேரை பள்ளியின் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கவும், அவர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நிர்வாகிகளுக்கு அதிகாரமளித்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - பொறுப்புக் காலம்:
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகத்தின் பொறுப்புக் காலம், 12.10.2014 முதல் 11.10.2017 வரையாகும்.
தீர்மானம் 5 - பழைய நிர்வாகிகளுக்கு நன்றி:
இதற்கு முன் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு இன்றைய பொதுக்குழு தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 6 - வங்கிக் கணக்குகள்:
பள்ளியின் வங்கிக் கணக்குகளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய இணைச் செயலர்களுள் யாரேனும் இருவர் இயக்கிக்கிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 7 - வரவு-செலவு கணக்கறிக்கை:
பள்ளியின் கணக்குகளை, பள்ளியின் இணைச்செயலாளர் எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் தாக்கல் செய்தார். கணக்குகளும், மீதி இருப்பு ரூபாய் 83,001 தொகையும் கூட்டத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தீர்மானம் 8 - புதிய கணக்கர்:
பள்ளியின் புதிய கணக்காளராக எம்.ஏ.அஹ்மத் லெப்பை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பழைய நிர்வாகிகள்...
புதிய நிர்வாகிகள்...
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |