காயல்பட்டினத்தில் இம்மாதம் 10ஆம் நாள் பெய்த மழைக்குப் பிறகு மீண்டும் மழை பெய்யவி்ல்லை. அவ்வப்போது மேகமூட்டம் உருவாவதும், வானம் இருட்டுவதும், சில நிமிடங்கள் படம் காண்பித்த பின் காரணம் சொல்லாமல் களைவதும் வாடிக்கையாகிப் போனது.
நேற்று (அக்டோபர் 14) மாலையிலும் காயல்பட்டினத்தில், ஏதோ கனமழை பெய்து கடும் சேதத்தை விளைவிக்கும் தோரணையுடன் மேகமூட்டம் காணப்பட்டது. எனினும் அடுத்த சில நிமிடங்களில் அதுவும் வழமை போல் கலைந்துவிட்டது.
இவ்வாறிருக்க, இன்று அதிகாலை 06.00 மணியளவில் காயல்பட்டினத்தில் சில நிமிடங்கள் சாரல் மழைத் தூறல் காணப்பட்டது.
இன்று காலை 11.45 மணி நிலவரப்படி வெப்ப வானிலை நிலவுகிறது.
படங்கள்:
சாளை பஷீர்
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. அல்லாஹ்வின் கருணை கொடை! posted byமுஹம்மது ஆஅதம் சுல்தான்! (yanbu)[15 October 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37751
அன்பின் அட்மின் அவர்களுக்கு,தயவு செய்து ஒழுங்கான படக்காட்சிக்கருவியை பயன்படுத்துங்கள்,தங்களின் இரண்டாவது(கீழுள்ள) புகைப்படத்தில் மாணிக்க மரகத முத்துக்கள் சிதறி இருக்குக் காட்சியை ஏதோ கருமை புள்ளிகள் படர்ந்திருப்பதுபோல் படமாக்கியுள்ளீர்களே!(உரிமையுடன் ஒரு சிறு கோபம்)
நம்மை படைத்தவன் பூமிக்கு நமக்கு பறந்து தூவிய மாணிக்க மழை முத்துக்களின் மகிமையைதான் மேற்கோள் காட்டினேன்.
அந்த மாணிக்க மழைத்துளிச்சிதறல்கள் மேகத்திலிருந்து விழும்பொழுது படமாக்கி இருந்தால் அது உயரத்திலிருந்தே மின்னிக்கொண்டு இம் மண்ணையடையும் அற்புத காட்சியை கண்டிருக்கலாம்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
2. காமிரா உங்கள் சாய்ஸ்...! posted byM.N.L.Mohamed Rafeeq (Singapore)[16 October 2014] IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37772
அதிகாலை சாரலை அழகாகப் படம் பிடிக்க அயல் நாட்டிலிருக்கும் ஆதம் சுல்தான் அவர்களே...! இயறகைப்பரியன் சாளையாரக்கு ஆவண செய்வீர்களா ஒரு காமிரவை அவர் கலர் கலரா கலக்குவார் போங்க...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross