செய்தி: DCW மீது நடவடிக்கை கோரி காயலர்கள் அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை! ஹஜ் பெருநாள் மாலையில் கடற்கரையில் KEPA சார்பில் அஞ்சல் அட்டை வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
KEPA விற்கு ஒய்வுமில்லை ,அதன் உணர்சிகள் ஒடுங்கவுமில்லை! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[16 October 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37764
“KEPA” அமைப்பு ஏதோ அமைதியாக இருப்பது போல் ஒர் உணர்வு கடந்த சில நாட்களாகவே என்னுள் எழுந்தது, என் அய்யத்தை தீர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டத்தை அரம்பித்திருக்கிறது அல்ஹம்திலில்லாஹ்.
அவ்வளவு எளிதில் அசரக்கூடிய அமைப்பா ”KEPA”? அல்லாஹ்வின் துணையுடனும் நம் அத்தனைபேர்களின் ஒத்துழைப்புடனும் நம்மூருக்கு ஒரு பொன்னான விடியலை பெறக்கூடிய புண்ணிய நிலையைத்தரத்தான் போகிறார்கள் .நம்முடைய கடமை அவர்களின் புண்ணிய எண்ணத்திற்கும், செயலுக்கும் வலு சேர்க்க வேண்டியது மட்டுமே!
இந்த அஞ்சல்அட்டை போராட்டத்தில் “KEPA” அமைப்பானது ஒரு சில வாசகங்களை அமைத்து அதை துண்டு பிரசுரமாக்கி பொது மக்களுக்கு விநியோகித்து இருக்கலாம், ஏனெனில் இந்த நச்சுஆலை கழிவு கிருமி தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மனப்புண் வடுக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறியிருக்காது, கொதிப்புத்தான் கொப்பளித்து கொண்டு வரும் அந்த நேரத்தில் வார்த்தைகள் வரம்புமீறி அந்தஆலையின் அநியாயத்தை அனைவரும் அறியவேண்டுமென்ற வெறியில் அநாகரீக வார்த்தை களைக்கூட எழுதக்கூடிய துரதிஷ்ட்டநிலை உண்டாகிவிடும். அப்படிப்பட்ட வாசககங்கள் அடங்கியன் அஞ்சலட்டைகளை பார்ப்பவர்களுக்கு நம்முடைய தரத்தின் தன்மை சற்று தளர்ச்சியாகிவிட்டது போன்ற நிலையை எற்படுத்தி விடக்கூடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross