va வாவு என்ற இறுதி எழுத்து நம் உள்ளங்களில் முதல் எழுத்து posted bymackie noohuthambi (chennai)[17 October 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37779
இந்த நிலத்தை வாங்குவதற்கு ஒத்துழைத்தவர்கள், அதன் விலையை குறைக்கும்படி போராடியவர்கள் அதை இந்த நிறுவனத்துக்கு விலையில்லா நிலமாக பல சதுர அடிகளை தானமாக தந்தவர்கள் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்கள்.
வள்ளல்கள் பிறப்பதில்லை அவர்கள் உருவாகிறார்கள் என்பதுதான் உண்மை. எல்லாக் காலங்களிலும் இப்படி கல்விக்கு, பள்ளிக்கு, மருத்துவத்துக்கு, பொது சாலை வசதிகள் ஏற்படுத்துவதற்கு என்று பலவாறாக அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் நமதூரின் பெருமையை உயர்த்தி இருக்கிறார்கள். அந்த வழியில் இது ஒரு மைல் கல்.
வாவு என்ற எழுத்து அரபி மொழியில் இறுதி இடத்தில இருந்தாலும் அது தமிழில் ஆயுத எழுத்து போல் ஒரு முக்கியமான தனித்துவமான எழுத்து. அவர்கள் வாரிக் கொடுக்கும் வள்ளல்தன்மையால் அந்த எழுத்து இப்போது நமது எல்லோர் உள்ளத்திலும் முதல் இடத்தில இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.
பேசிக் கொண்டே இருக்காமல் ஒரு முடிவுக்கு வருவோம், இதன் விலையை குறைத்துத் தாருங்கள் என்று வாப்பா உம்மாவிடம் அடம் பிடிக்கும் குழந்தைபோல் வாவு சகோதரர்களின் மடியைப் பிடித்து ஒரு முடிவுக்கு வர செய்த அருமை சகோதரர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொது செயலாளர் இளமை துடிப்புடன் இயங்கும் அபூபக்கர் அவர்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துக்கள்.
சமயம் பார்த்து சமரசம் செய்து, விட்டுக் கொடுத்து, தட்டிக் கொடுத்து விஷயங்களை சாதிப்பவர் இவர் என்பதை நான் அவதானித்து வருகிறேன். இக்ரா கூட்டத்தில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டபோது காலம் தவறாமல் நேரம் தவறாமல் அந்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு ஆற்றிய உரை இளைய தலைமுறைக்கும் முதிய தலைமுறைக்கும் ஒரு நட்பு பாலத்தை அமைத்துக் கொடுப்பதாக அமைந்து இருந்தது.மாஷா அல்லாஹ். INTELLIGENT QUOTIENT SUPPORTED WITH EMOTIONAL QUOTIENT. IQ - EQ இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
இக்ரா மென்மேலும் மக்கள் பணியில் கல்விப் பணியில் தன பணியை முன்னெடுத்து செல்ல இந்த நிலம் கட்ட்டிடமாகி ஊரின் ஒரு கேந்திர நிலையமாக மாற அல்லாஹ் அருள் புரிவானாக. காய்தல் உவத்தல் இன்றி இதில் பணியாற்றும் எல்லோருக்கும் எனது இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross