காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த இடம் வாங்கப்பட்டு, பத்திரப்பதிவும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த இடம் வாங்கிட அதன் கலந்தாலோசனைக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டு, பொருத்தமான இடம் நகர் முழுக்க தேடப்பட்டது. நிறைவில், காயல்பட்டினம் கொச்சியார் தெருவுக்குப் பின்புறமுள்ள சாலையில் ஸீ-கஸ்டம்ஸ் சாலையையொட்டிய பகுதியில், ஹாஜி வாவு ஹபீபுல்லாஹ் அவர்களுக்குச் சொந்தமான 4000 சதுர அடி நிலத்தை வாங்கத் தீர்மானிக்கப்பட்டது.
மொத்த நிலத்தில் 2 ஆயிரம் சதுர அடியை நன்கொடையாகவும், மீதி 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை சலுகை விலையிலும் அவர் தந்துதவியுள்ளார். இதற்காக அவருக்கு முறைப்படி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலம், இம்மாதம் 09ஆம் நாள் வியாழக்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பத்திரப்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, இக்ராஃவின் நடப்பு தலைவரும், ரியாத் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ் தலைமையில் - இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீது, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, சமூக ஆர்வலர் சுலைமான் ஆகியோர் முன்னிலையில், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் இணைந்து நிலத்திற்கான பணத்தைக் கையளிக்க, நில உரிமையாளர் சார்பில் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் அதனைப் பெற்றுக்கொண்டார்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |