கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 100 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால், எமது கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் ஆகியன, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புடன் இணைந்து, திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம், திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் மூலமாக, புற்றுநோய் பரிசோதனை 7ஆவது இலவச முகாமை, இம்மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, நமதூர் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தின.
இம்முகாமில், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர், டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்பிரியா ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 55 பெண்களும், 45 ஆண்களும் என மொத்தம் 100 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாக, ‘ஜாஸ் பெர்ஃப்யூம்ஸ்’ ஜெ.ஏ.அப்துல் ஹலீம், ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல் ஆகியோர் மருத்துவர்களுக்கு துணைப் பணியாற்றினர்.
முகாம் நிறைவில், கத்தர் மற்றும் ஹாங்காங் மன்றங்கள் சார்பில், பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் Speculum கருவிகள் – ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
முகாம் ஏற்பாடுகளை, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித் தலைமையில், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான கத்தீபு ஏ.ஆர்.எம்.எம்.மாமுனா லெப்பை, சுலைமான், சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அன்ட் வெல்ஃபர் அசோஷியேஷன் நிர்வாகி கண்டி ஸிராஜ், கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், காதர் சுலைமான், கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ரியாத் காயல் நல மன்ற தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ், ஹாங்காங் பேரவை செயற்குழு உறுப்பினர் கம்பல்பக்ஷ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
zபெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஏற்பாட்டில் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்தனர்.
‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |