காலஞ்சென்ற - ‘காயல் பிறைக்கொடியான்’ கவிஞர் எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன் அவர்களின் தம்பி, எஸ்.எம்.பி.முஹம்மத் யூஸுஃப், நேற்று (அக்டோபர் 16) 17.30 மணியளவில், இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள புளிச்சகுளம் என்ற அவரது சொந்த ஊரில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,
வரகவி காசிம் புலவர் வழித்தோன்றல் மர்ஹூம் யூஸுஃப் லெப்பை அவர்களின் மகன்வழிப் பேரனும்,
மர்ஹூம் செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் உமர் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் ‘காயல் பிறைக்கொடியான்’ கவிஞர் எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன், மர்ஹூம் எஸ்.எம்.பி.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் ம.கு.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ், மர்ஹூம் அரபி முஹம்மத் இஸ்மாஈல், புலவர் காஜா, புலவர் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் மச்சானும்,
புகாரீ மவ்லானா என்பவரின் தந்தையும்,
எம்.எச்.ஷாஜஹான் என்பவரின் சிறிய தந்தையும்,
எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ என்பவரின் பெரிய தந்தையும்,
எம்.எஸ்.மொகுதூம் நெய்னா, எம்.ஐ.முஹம்மத் யூனுஸ், ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் அரபி எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோரின் தாய்மாமாவும்,
எம்.எஃப்.முஹம்மத் ரகீஸ் என்பவரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.00 மணியளவில், கொழும்பு புளிச்சகுளத்திலுள்ள தைக்கா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:
‘Hardy Boys’ ஃபைஸல் |