சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அதிமுக காயல்பட்டினம் நகர கிளையினர் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அக்கட்சியைச் சேர்ந்தவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் கட்சிக் கொடியேற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
அதிமுக காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.முகைதீன், வார்டு செயலாளர் என்.எம்.அஹ்மத் உள்ளிட்ட கட்சியினர் இதன்போது உடனிருந்தனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[18 October 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37804
இது நான் எதிர்பார்த்த தீர்ப்பு தான். மக்கள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மக்கள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்க்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீடித்து நிற்கும் தன்மையற்றது. சிறிய அளவிலான குற்றத்துக்கு ரூ.100 கோடி அபராதம் என்பது ஏற்க முடியாது எனவே உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மேல் முறையீட்டின் போது இது தெரியவரும். அதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்
தமிழ் நாட்டை வழி நடத்த புரட்சி தலைவியை மக்கள் முதல்வர் அம்மாவை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது அனைவரும் அரிந்த ஒன்ரே இன்னொரு புரம் ஜாதி மதம் இன்றி மக்கள் செய்த தெய்வீக பிராத்தனை.
நீதிமன்ற மேல்முறையீட்டில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
புரட்சி தலைவியின் உண்மை விசுவாச தொண்டர்களே, அம்மா மீதுள்ள அன்பின் காரணமாக நீதிமன்ற தீர்ப்பு , நீதிபதி என யார் குறித்தும் எந்த வித விமர்சனமும் செய்ய வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[19 October 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37826
அஸ்ஸலாமு அலைக்கும்
மரியாதைக்குரிய நம் தலைவி அம்மா அவர்களுக்கு ...... ஜாமீன் கிடைத்து இருப்பது தமிழக மக்களுக்கு பெரும் மற்றற்ற மகிழ்ச்சியை தருகிறது ......தமிழக மக்கள் யாவர்களின் எண்ணம் போலும் & கடவுளிடம் மக்கள் வேண்டிய பிராத்தனையின் ( பலன்தான் இது ) எண்ணம் போலும் நடந்து உள்ளது ....
தமிழகத்து மக்களுக்கு இன்னும் பல நல்ல ,, நல்ல ,,,,அற்புதமான திட்டங்களை தருவார் .....மக்கள் நிச்சயம் பயன் பெறுவார்கள் .....இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை ....
விரைவில் தமிழக மக்கள் பல நல்ல அறிவிப்புக்களை காணலாம் ....தொடர்ந்து பயனும் மலை போல பெறலாம் ......
மரியாதைக்குரிய அம்மா அவர்களின் சீரிய / கூறிய ...சிறப்பான பார்வையில் நாம் பயனை அடைவோம் .....தொடரட்டும் >>>> ADMK ....ன் சாதனைகள் ...........
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross