நடப்பு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் முதல் நவம்பர் மாதம் 10ஆம் நாள் வரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தமது விபரங்களைத் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
01.01.2015 தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2015 நடைபெறவுள்ளது. 01.01.2015இல் 18 வயது நிறைவடைந்தவர்கள் (01.01.1997க்கு முன்னர் பிறந்தவர்கள்) வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவார்கள்.
15.10.2014 முதல் 10.11.2014 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு மனுக்கள் பெறப்படும்.
பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6ஐயும்,
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ஐயும்,
வாக்காளர் பதிவு குறித்த விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8 ஐயும்
ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8ஐயும்
பயன்படுத்த வேண்டும்.
வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலுள்ள வாக்குச்சாவடி மையத்திலுள்ள அலுவலர்கள் மனுக்களைப் பெறுவார்கள். மேற்படி மையங்களில் 26.10.2014, மற்றும் 02.11.2014 ஆகிய தேதிகளில் மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்படும்.
www.elections.tn.gov.in/eregistration/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமும் விண்ணப்பம் செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், குறைகளைத் தெரிவிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் 0461-2340099 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross