ஐக்கிய அரபு அமீரகம் - துபை கா.ந.மன்றம் சார்பில், காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு முழு உடல் மருத்துவ இலவச பரிசோதனை செய்யப்படவுள்ளது. விபரம் வருமாறு:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எமது துபை காயல் நல மன்றத்தின் சார்பில், நம் நகரின் அனைத்து பள்ளிவாசல்களது இமாம்கள், முஅத்தின்கள், பணியாளர்கள், அனைத்து மத்ரஸாக்களின் ஆசிரியர்கள் - ஆசிரியையருக்கு நமதூர் கே.எம்.டி.மருத்துவமனையில், முழு உடல் மருத்துவ இலவச பரிசோதனை (Master Health Checkup) சில மாதங்களுக்கு முன் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, நகரின் அனைத்து துவக்கப்பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அல்அமீன் தொழில்நுட்பப் பள்ளி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியர்கள், ஆசிரியையர், பணியாட்கள் (Non Teaching Staffs) அனைவருக்கும், கே.எம்.டி.மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ இலவச பரிசோதனை (Master Health Checkup) செய்ய முடிவு செய்யப்பட்டு, இம்மாதம் 15ஆம் நாள் முதல் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட அது தொடர்புடைய அனைவரும் ஒத்துழைக்குமாறு, திட்ட ஒருங்கிணைப்பாளர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் கேட்டுக்கொண்டுள்ளார்.
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |