காயல்பட்டினத்தில் நேற்று (அக்டோபர் 19) பெய்த தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களுக்குள் மழை நீர் புகுந்தது.
தரையையொட்டி தாழ்வான நிலையில் அமைந்திருக்கும் பெரிய குத்பா பள்ளியில் - வெளியிலிருந்து சேறு கலந்த மழை நீர் வேகமாக உட்புகுந்து, கத்தீப் நிற்கும் மிம்பர் (மேடை) வரை தேங்கியது.
அதிகாலையில் இக்காட்சியைக் கண்டு மஹல்லா ஜமாஅத்தினர் அதிர்ச்சியுற்றனர். காலை 06.30 மண துவங்கி, 09.45 மணி வரை அங்கு மழை நீரை அகற்றி துப்புரவுப்படுத்தும் பணி நடைபெற்றது.
பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.ஏ.ஜவாஹிர், துணைச் செயலாளர் கத்தீபு இப்றாஹீம், பொருளாளர் குளவி ஷேக் அப்துல் காதிர், நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, பெரிய குத்பா பள்ளி இமாம் ஹாஃபிழ் கே.ஏ.நத்ஹர் ஸாஹிப் உட்பட - பள்ளியின் மஹல்லா ஜமாஅத்தினரும், சமூக ஆர்வலர்களும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு, மழை நீரை முற்றிலுமாக அகற்றி, உள் பள்ளி - வெளிப்பள்ளி ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்தனர்.
படங்களுள் உதவி:
K.M.T.சுலைமான்
குத்பா பெரிய பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |