காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை சார்பில், சிறுநீரக நோயாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இலவச முகாம், இம்மாதம் 19ஆம் நாளன்று 09.30 மணி முதல் 16.30 மணி வரை, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆ.லரீஃப் இம்முகாமில் நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து - ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கினார்.
முகாமில் பங்கேற்றோருக்கு யூரிக் அமிலம் (கல்) பரிசோதனை - அதற்கென கொண்டு வரப்பட்ட Uroflometer எனும் சிறப்புக் கருவியின் துணை கொண்டு இலவசமாக செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, டாக்டர் ரெட்டி லேபரேட்டரீஸ் மருந்து நிறுவனத்தின் மேலாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.
காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 38 பேர் இம்முகாமில் பங்கேற்றுப் பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை, கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகள், மேலாளர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தகவல்:
K.அப்துல் லத்தீஃப்
மேலாளர் - கே.எம்.டி. மருத்துவமனை
கே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |