காயல்பட்டினத்தில் இன்று 17.30 மணி துவங்கி, தற்போது வரை (23.50 மணியளவிலும்) இடைவெளியின்றி கனமழை பெய்து வருகிறது. இம்மழை காரணமாக நகரின் அனைத்து வீதிகளிலும் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. பல சாலைகள் சிதைந்து காணப்படுகின்றன.
வாகனப் போக்குவரத்து சாத்தியமற்றுப் போனதால், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பிரதான வீதி, கூலக்கடை பஜார் உள்ளிட்ட கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கனமழை காரணமாக பல கடைகள் நிர்ணய நேரத்திற்கு முன்பாகவே அடைக்கப்பட்டுவிட்டன. இன்று 19.30 மணி முதல் 22.30 மணி வரை நகரில் மின் வினியோகமும் தடைபட்டிருந்தது.
இம்மழை காரணமாக நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்களில் உதவி:
V.D.சதக்கு தம்பி
மற்றும்
காஜா கமால்
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. எங்களூரை குளிர வைத்த கோமானே!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[20 October 2014] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37830
முதல் படம் மழை முத்துக்களை மிகத்துல்லியமாக படமாக்கியதற்க்கு என் மனம் நிறைந்த பாரட்டுக்கள்!
அல்லாஹ்வின் ரஹ்மத்தாகிய அகம் குளிரும் மழையை அங்கினாதபடி எங்கும் எல்லாவிடத்திலும் சொரியச்செய்து விட்டு எங்கள் எல்லோர்களின் இல்லங்களையும் உள்ளங்களையும் குளிரவைத்தவனே, கருணை கொடையாளனே,நீ,
காயல்பதியில் கனநேரமும் இடைவிடாது உன் கருணை மழைப்பொழிவை பொழிந்ததிலிருந்து ,இங்கு புண்ணியர்களும், கண்ணியர்களும் கணக்கின்றி கிடக்கின்றனர் என்பதின் அடையாளமாகத்தான் இந்த அன்புமழை பரிசோ!
என்னிறைவா! எங்களூரை குளிர வைத்த கோமானே-உன் அன்பிற்கும்,அரவணைப்புக்கும் எங்கள் இறுதி உணருள்ளவரை உனையே நிமிடமாய், நித்தமாய் நீண்ட தவம்புரிந்து போற்றி புகழ்ந்து கொண்டே இருக்க எங்கள் ஆயுளை அரிதாக்கி சுருக்காமல் ஆழமாக்கி நீட்டிடு
யா அல்லாஹ்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
2. Re:... posted byMAC.Mujahith (Mumbai)[20 October 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 37832
போதுமான அளவு மழை வரட்டும்..." சாலையில் நீர் தேங்குதல், டிராபிக் பாதிப்பு, நீண்ட நேரம் மின்தடை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு முதலியன சிறு அசௌகரியங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். மழை வந்து பயிர் செழித்தால்தனே விலைவாசி குறையும்."நாமும் நம் ஊரும் நன்றாக இருக்க முடியும்.." அதை விட்டுட்டு ஸ்கூல் பிள்ளைங்க போல புகார் கூரிகொண்டிருந்தால்..."
இந்த மழை என்ற அருட்கொடையால் எங்களின் மனதை குளிர்வித்த அந்த அல்லாஹ் விற்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்..."
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[20 October 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37835
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்......வல்ல இறைவனின் இந்த நர்கொடையை பெற்றமைக்கு நாம் யாவர்களும் அவனுக்கு '' சுகூர் '' செய்ய வேணும் ......அல்ஹம்துலில்லாஹ் '''''
எல்லா புகழும் அல்லாவுக்கே ....நம் ஊர் அனைத்து மக்களுக்கு எந்த ஒரு நோய் நொடிகளும் அணுகாது காப்பாற்றி அருள்வாயாகவும் மற்றும் எங்களுக்கு அதிகமான பரக்கத்தையும் ,, மன நிம்மதியையும் கொடுத்தருள்வாயாகவும் ஆமீன்......
இடி ''மின்னல் ''சமையம் நம் ஊர் மக்கள் நிறைய பேர்களின் ...செல் போன்,, டிவி ,, மற்றும் ஒரு சில மின்சாதனங்கள் பழுதாகி போய்விட்டன ......
இடி '' மின்னல் '' சமையம் மின்சதானங்களை ...தயவு செய்து சார்ச்சில் போடாமலும் ,, கேபிள் கனைக்சனை கட்,, பன்னுவதும் தான் நல்லது ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross