இவ்வாண்டு (ஹிஜ்ரீ 1435) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு ஹஜ் குழுமம், தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாக - காயல்பட்டினத்தைச் சேர்ந்தோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
ஹஜ் கடமையை நிறைவு செய்த பின், புனித மதீனா நகரிலுள்ள - இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஸ்ஜிதுந் நபவீ பள்ளியில் வழிபாடுகளை நிறைவேற்றி, அங்குள்ள நபிகளாரின் மறைவிடத்தில் ஜியாரத் செய்தனர்.
காயல்பட்டினத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களுள், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும், விஸ்டம் பப்ளிக் பள்ளியின் தலைமையாசிரியருமான எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் கே.காஜா முஹ்யித்தீன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தகவல் & படங்கள்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பயணம் சென்ற காயலர்கள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு ஹஜ் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |