ஹாங்காங்கிலுள்ள காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (Kayal Students Welfare Association - KSWA) சார்பில் நடைபெற்ற அதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இன்பச் சிற்றுலா நிகழ்ச்சிகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது ஹாங்காங் கஸ்வா அமைப்பின் 2014ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்குழு மற்றும் இன்பச் சிற்றுலா நிகழ்வுகள், ஹாங்காங் லண்தாவு தீவில் உள்ள YHA Ngong Ping SG Davis Youth Hostel என்ற இடத்தில், இம்மாதம் 11 மற்றும் 12ஆம் நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெற்றன.
வருடாந்திர பொதுக்குழு:
சுற்றுலாவின் இரண்டாம் நாள் 12ஆம் நாள் ஞாயிற்றுகிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு கஸ்வாவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் சிறப்புற நடைபெற்றது.
இக்கூட்டத்தை, ஹாஃபிழ் எம். எம்.சுல்தான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எம்.செய்யித் அஹ்மத் வரவேற்புரை ஆற்றி கஸ்வாவின் செயல்பாடுகள் குறித்த 2013-14ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். வருடாந்திர வரவு - செலவு கணக்கறிக்கையை பி.எஸ்.ஏ.அஹ்மத் கபீர் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்ளுக்கு எஸ்.எச்.முஹம்மத் மக்பூல் விளக்கம்மளித்தார்.
தொடர்ந்து, வரும் காலத்தில் கஸ்வாவின் செயற்பாடுகள் மற்றும் அதன் நற்பணிகள் குறித்து உறுப்பினர்கள் கலந்தாலோசனைகளும், கருத்து பறிமாற்றமும் செய்து கொண்டனர். கஸ்வாவில் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் வாழ்த்துரை வழங்கினார். ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் நன்றி கூற ஹாஃபிழ் எம்.எஸ்.ஷேக் தாவூத் துஆவுடன் கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன.
இன்பச் சிற்றுலா:
முன்னதாக 11ஆம் நாள் சனிக்கிழமையன்று 15.30 மணியளவில், சிற்றுலாக் குழுவினர் அடங்கிய பேருந்து சிம் ஷா சுய் YMCA அருகில் இருந்து புறப்பட்டு 16.30 மணிக்கு துங் சுங் பகுதியில் வசிக்கும் உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு 17:15 மணிக்கு சிற்றுலாத் தலத்திலுள்ள இளைஞர் விடுதிக்கு வந்தடைந்தனர்.
நிகழ்விடம் வந்திறங்கியதும், அஸ்ர் தொழுகை ஜமாஅத்துடன் நிறைவேற்றிய பிறகு அனைவருக்கும் மாலை நேர தேனீர் மற்றும் சமோசா பரிமாறப்பட்டது.
பொது அறிவு வினாடி-வினா போட்டி:
மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் நிறைவேற்றியதை தொடர்ந்து சுற்றுலா குழுவினர் எஸ்.எம்.கே.இஸ்மாயில், எம்.எஸ்.சதக் மீரான், ஏ.எல்.அப்துர்ரஹ்மான், எஸ்.ஆஷிக்கீன் ஆகியோர் தலைமையில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.
பொது அறிவு வினாடி-வினா, காயல்பட்டினம் வட்டார தமிழ்ச் சொல் விளையாட்டு (உதவி: சினாஷ், மக்காஹ்), tongue twistter, மாற்றி யோசி, உள்ளிட்ட சுவையான போட்டிகளை எஸ்.எச்.முஹம்மத் மக்பூல் துணையுடன் ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் வழிநடத்தினார். இப்போட்டிகளை அவர் கடந்த ஆண்டை விட சிறப்பாக வடிவமைத்து லேப்டாப் மற்றும் ப்ரொஜெக்டர் உதவியுடன் நடத்தியது மிகவும் விறுவிறுப்பாகவும் சுவராசியகமாகவும் இருந்தது.
போட்டிகளின்போது, வழமை போல் பங்கு பெற்ற அணிகளிடையே (செல்ல) சண்டை - நசுவல்களுடன் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. இரவுணவாக புரோட்டா, கறி மற்றும் ஒம்லெட் சமைத்துப் பரிமாறப்பட்டது.
விளையாட்டு:
மறுநாள் 12ஆம் நாள் ஞாயிற்றுகிழமை காலை தேனீர் மற்றும் சிற்றுண்டிக்கு பிறகு அனைவரும் கால்பந்து, மலை ஏறுதல், பாட்டு போட்டி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட்டனர்.
அன்று மதியம் பொதுக்குழு கூட்ட நிறைவுக்குப் பின், மதிய உணவாக பிரியாணி மற்றும் தாளிச்சா பரிமாறப்பட்டது.
குலுக்கல் மூலம் பரிசுகள்:
அன்று 16.00 மணியளவில் தேநீர் பருகிய பின்னர், குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் பல வழங்கப்பட்டன.
குழுப்படங்கள்:
அஸ்ர் தொழுகை ஜமாஅத்துடன் நிறைவேற்றி, குழு படங்கள் எடுத்த பின்னர் குறித்த நேரத்தில் பேருந்தில் அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரத்துவ வாஞ்சையுடன் கூடிய உறுப்பினர்களின் ஒற்றுமை, வலிமையான செயல்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றின் துணையுடன் இனி வருங்காலங்களில் இன்னும் பல வெற்றிகளை இவ்வமைப்பு காண வேண்டுமென அனைரும் பிரார்த்திக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளும், நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும் நம் யாவர் மீதும் நிறைவாக சூழட்டுமாக, ஆமீன்.
சுற்றுலாவில் எடுக்க பட்ட மேல் அதிக புகைப்படங்களை காண, இங்கே சொடுக்குக!
இவ்வாறு, KSWA அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஸ்வா அமைப்பின் இன்பச் சிற்றுலா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கஸ்வா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |