செய்தி: அக். 17, 18, 19இல் - ஷிஃபா, மைக்ரோகாயல், அபூதபீ கா.ந.மன்றம் இணைந்து நடத்தும் - மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒரு சுன்னத் சுகாசனம் ஆகிறது posted bymackie noohuthambi (chennai)[20 October 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37833
நாம் நமதூரில் சம்மணம் கூட்டி உட்கார்ந்து சாப்பிடுகிறோம். அது நபிகள் நாயகம் காட்டி தந்த வழி முறை என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிதந்திருக்கிரார்கள். ஆனால் அது "சுகாசனா அல்லது பாதி பத்மாசனா"என்று சொல்லும் செய்தியை கீழே பாருங்கள். 1436 வருடங்களுக்கு முன் கண்மணி நாயகம் அவர்கள் சொன்னதை இப்போது எல்லோரும் சொல்கிறார்கள்.
நாம் கால்களை குறுக்காக மடக்கி சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது, இயல்பாகவே ஆசன நிலைக்கு வந்துவிடுகிறோம். இதற்கு "சுகாசனா' அல்லது "பாதி பத்மாசனா' என்று பெயர். இந்த முறையில் அமைதியாக சாப்பிட உட்காரும்போதே ஜீரணத்துக்கு தயாராகுமாறு மூளைக்கு தகவல் சென்றுவிடுகிறது. சாப்பிடும் தட்டு தரையிலிருப்பதால் நாம் இயல்பாகவே குனிந்து, நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வைக்கிறது.
பத்மாசன நிலையில் இருக்கும் போது வயிற்றைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால், அந்த இடத்தில் ஏற்படும் வலிகள் குறைகின்றன. மேலும் இந்த ஆசன நிலையில் வயிறு அழுத்தப்படாமல் இருப்பதால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.
நாம் தரையில் நேராக அமர்ந்து சாப்பிடும்போது. முதுகெலும்பும், தோள்களும் சீரான நிலையில் இருக்கின்றன. இதனால் தாறுமாறான நிலையில் உட்காருவதால் ஏற்படும் வலிகளும், அசதியும் நீங்கிவிடுகின்றன.
தரையில் அமர்வதால் முழங்கால் மூட்டுகளும், இடுப்பு எலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால் இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கும் அதில் பங்கேற்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் நோயற்ற வாழ்வு வாழ நபிகள் நாயகம் மூலம் பல நிவாரண வழிகளை நமக்கு கற்று தந்துள்ளான். அதன் படி வாழ நம் எல்லோருக்கும் தவ்பீக் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross