செய்தியை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[20 October 2014] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37837
நமதூர் ஆட்டோவில் நான் சந்தித்த இரு சம்பவங்கள்:
ஒன்று.. அலியார் தெருவிலிருந்து மரைக்கார்பள்ளி தெருவிற்கு (ஸி- கஸ்டம்ஸ் சாலையிலுள்ள ம.பள்ளி தெருவுக்கு எதிர்வீடு) செல்வதற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்பொழுது அப்பாபள்ளி தெருவில் ஒரு வீட்டருகே நிறுத்தி எங்களுடன் வந்தவரின் மகளை ஏற்றிக்கொண்டோம் அதே நேரத்தில் எங்களுடன் வந்த ஒரு பெண்மணியும் அந்த இடத்தில இறங்கி விட்டார்கள் எங்கள் இடம் வந்தவுடன் நாங்கள் இறங்கியபின் ஆட்டோ ஓட்டுனர் ஐம்பது ரூபாய் கேட்டார் ஏன்பா ஐம்பது இருபத்தி ஐந்து தானே என்றேன், இல்லை காக்கா டபுள்சவாரி, அப்பாபள்ளியில் ஒருஆளை ஏற்றியும் இருக்கிறேன் இறக்கியும் இருக்கிறேன் ஒருமுனையிலிருந்து இன்னொரு முனையில் நின்றாலே ஒரு சவாரி கணக்கு தான் என்றார்.
ஏம்பாஅது வரும் வழிதானே நான் கூட முதலில் சொல்லவில்லை அப்பாபள்ளி தெருவழியாக போ என்று நீயாகத்தான் அந்த வழியில் வந்தாய் ஒரு நிமிடம் ஒரு ஆளை இறகியதற்கா ஒரு சவாரி துட்டு கேட்க்கிறாய் என்றேன். இல்லை காக்கா இதுதான் நடைமுறை இதை யாரிடம்வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.
அடுத்த சம்பவம், அதிகாலை நேரம் ரயில்வே நிலையத்திலிருந்து என் வீட்டிற்கு ஆட்டோவில் வந்தேன்,அந்த ஓட்டுனர் என்பது ரூபாய் கேட்டார் இதற்குமுன் நூறு ரூபாய் கொடுத்திருக்கிறேன்,அப்பொழுதுதான் அவரை சற்று முழுமையாக பார்த்தேன்.என்னிடம் சில்லறை 60 ரூபாய் மட்டுமே இருந்தது,கொஞ்சம் இரு வீட்டில் வாங்கித் தருகிறேன் என்று வீட்டு கதவை தட்டினேன் கதவு உடனே திறந்தபாடில்லை சரி காக்கா வீட்டில் தூங்குகிறார்கள்
நான் பிறகு வந்து வாங்கிகொள்கிறேன் என்று என் பதிலுக்கு கூட காத்திராமல் சென்று விட்டார்.அவர் சென்றவுடன் தான் நினைத்தேன் அவர் பெயரையும் போன் நம்பரையும் வாங்கி இருக்கலாமே என்று.
அடுத்து சில நாட்களாகியும் அவர் வாடகையை வாங்க வரவே இல்லை.பிறகு பல சிரமத்திற்கு மத்தியில் ஆட்டோ நிலையத்திற்கு சென்று ஒரு மாதிரியாக அவரை கண்டுபிடித்து விட்டேன்.அவர் வெளியூர் சென்று விட்டதாக கூறினார். வாடகையை கொடுக்கும்பொழுது அவர் சொன்ன வார்த்தை எங்கே போய்விடும் காக்கா உங்க பணம்,நீங்க பேரம் பேசாமல் இருந்ததிலிருந்தே எப்படியும் எம் பணம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை.எனக்கிருந்தது என்றார்.
இந்த இருவகை மனிதர்களின் மாண்புகளை மதிப்பிடும் தராசை இச்செய்தியை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross