துபை கா.ந.மன்றம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பணிவோடு வினவுகிறேன்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[20 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37841
நகரின் அனைத்து பள்ளிவாசல்களது இமாம்கள், முஅத்தின்கள், பணியாளர்கள், அனைத்து மத்ரஸாக்களின் ஆசிரியர்கள் - ஆசிரியையருக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்வது / நடத்துவது ஏற்புடையது கருதுகிறேன் / அதை நான் வரவேற்கிறேன்.. பாராட்டுகிறேன்..!
அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அலுவலர்கள், ஆசிரியர்கள் - ஆசிரியையருக்கு இந்த இலவச மருத்துவ பரிசோதனை அவசியமா..? என்ற கேள்வி என்னுள் எழுகிறது..!
மாதம் மாதம் கணிசமான அரசு ஊதியம் + போனஸ் மேலும் பல அரசு சலுகைகளை பெறும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் - ஆசிரியையருக்கு இந்த (FREE CHECKUP) இலவசத்தை தவிர்த்து கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி / மதரசா மாணவர்களுக்கு இந்த இலவச மருத்துவ பரிசோதனை செய்தால் வருமானமே இல்லாத நமது பள்ளி / மதரசா மாணவர்கள் பயன் பெறலாம்.. என்பது என் கருத்து..
மாதம் மாதம் கணிசமான அரசு ஊதியம் + போனஸ் மேலும் பல அரசு சலுகைகளை பெறும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் - ஆசிரியையர்கள் எவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ காப்பீடு இலவச திட்டத்தில் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை..!
நகரின் அனைத்து பள்ளிவாசல்களது இமாம்கள், முஅத்தின்கள், பணியாளர்கள், அனைத்து மத்ரஸாக்களின் ஆசிரியர்கள் - ஆசிரியையர்களின் நிலைமை வேறு எந்த அரசாங்கம் / ஆட்சியாளர்கள் இவர்களை கவனிக்கிறார்கள்..? எவருமில்லை என்பதே உண்மை - நாம் தான் இவர்களுக்கு அணைத்து விதமான தேவைகளையும் செய்ய வேண்டும்.. இவர்களுக்கு என்ன பெரிய ஊதியம் / வருமானம் வருகிறது..
துபை கா.ந.மன்றம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பணிவோடு வினவுகிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross