எப்பா மணிக்கணக்குல பின்னு பின்னுன்னு பிடலெடுதுட்டுங்க.நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது கிணற்றருகே நின்று அள்ளிக் குளிக்க முடியும் நிலையில் உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டிணத்தில் அதிக மழைன்னா பாருங்கலேன்.இந்த கருமேகமும்,வானத்தில் சட்டியை போட்டு உருட்டுற இடியின் உறுமலும்,பளார் என்ற இதயத்தை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைக்கும் இடியின் அலறல் எப்பா சொல்ல வார்த்தை இல்லங்க.
இதெல்லாம் பார்க்கும்பொழுது சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது பேய்ந்த பருவமழை போன்று இந்த வருடம் அமைந்துள்ளது எனலாம்.எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேக்கங்கள்,நான் வசிக்கும் தீவு தெருவில் சிற்றருவியில் தண்ணீர் ஓடுவதுபோல் தொடர்ந்து செல்லும் நீரோட்டம்.இதை எல்லாம் பார்க்கும்பொழுது என் எண்ணங்கள் மட்டுமல்ல,அணைத்து சகோதரர்களின் நினைவுகளும் மாணவர் பருவத்துக்கு இழுத்து செல்லும் என எண்ணுகிறேன் .
தொடர் மழையினால் பள்ளிக்கூடம் விடுமுறை என்றதும் ஏற்படும் சந்தோசத்தை வார்த்தையினால் வரைபடுத்த முடியாது எனலாம்.
பள்ளிக்கூடம் விடுமுறை என்றதும் நண்பர்கள் கூட்டத்தோடு குளம்,
குட்டை கடல் என நேரம் தெரியாமல் சுற்றித்திரிந்த அந்த இன்ப நேரங்கள் இதயத்தை தொடுகிறது.புது மழையில் வீட்டு குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீரில் ஓடோடி அருவியில் குளிப்பதுபோல் நண்பர்களோடு போடும் ஆனந்த குளியல் இன்று நினைத்தாலும் இதயம் நனைகிறது.அப்படி அந்த காலத்தில் பேய்ந்த பருவமழையை நினைவு படுத்தும் அளவிற்கு இந்த வருட பருவ மழை அமைந்துள்ளது.இறைவன் இந்த வருட பருவ மழையை நம் அனைவருக்கும் பயனுள்ள மழையாக ஆக்குவானாக என இறையிடம் இறைஞ்சுவோம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross