Reஒரு புலவன் போற்றும் பொய்!... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[28 October 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37902
மிகுதியான நாளில் நான் மானசீகமாக மதிக்கும் சகோதரர்களில் முஹம்மது ரபீக்கும் ஒருவர் என்பதை உள்ளச்சுத்தியோடு சொல்கிறேன். காயல்பட்டணம்.காம் மைப்பற்றிய உங்களின் கடமையுணர்வை நான் மதிக்கிறேன்! என் கருத்தாழத்தை பல வேளைகளில் புரிந்தவர்களில் தாங்களும் ஒருவர் என்ற நம்பிக்கை எனக்குண்டு!
மடியிலும் மார்பிலும் கிடத்தி கொஞ்சும் மழலையை "அடிக்கள்ளி" என்று இதயம் குளிர எப்படி பொய்யுரையால் புகழ் பாடுகிறோமோ, அதே வகையில்தான் காயல்பட்டணம்.காமை புகழ்ந்துரைத்தேனே அல்லாமல், பொய்யால் புனைந்த செய்தி என்ற இசைவற்ற எண்ணம் இமியளவில் கூட எம்மிதையத்தில் எழவில்லை!
ஒரு புலவன் போற்றும் பொய்க்கு ஒப்பான என் கருத்தால் உங்களுக்கோ, காயல்பட்டணம்.காமிற்கோ ஏதேனும் மனநெருடலெனில் மனம் பொருத்தருள்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross