Re:...நடைமுறையில் வரும்போதுதான் இதன் தாக்கம் தெரியும்.. posted bymackie noohuthambi (kayalpatnam)[28 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37918
இந்த 12.36% சேவை வரி பற்றிய சர்ச்சைகள் சந்தேகங்கள் தீர இன்னும் சில நாட்கள் ஆகும். இந்த திட்டம் அமுலுக்கு வந்தபின் நமதூர் பிள்ளைகள் வங்கிக்கு சென்று பணம் அனுப்பும்போது என்ன நடக்கிறது என்று அறிந்த பின்னார்தான் இந்த செய்திக்கு முழுமையான விளக்கம் கிடைக்கும். அது வரை பொறுத்திருப்போம். சில சட்ட நுணுக்கங்கள், clause கள் பற்றி உடனடியாக முடிவுக்கு வர முடியவில்லை. அரசாங்க ஆணைகள் எல்லாமே அப்படிதான். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்பவர்களும் இருப்பார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
சேணியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அரசு ஆதாயமில்லாமல் இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. வங்கிகளும் அவர்கள் சொல்வது மாதிரி கேட்டுக் கொண்டு தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் செயல்பட மாட்டார்கள். கடைசியாக பாதிக்கப்படுவது நாமாகத்தான் இருப்போம். எல்லாமே இங்கு வியாபாரம்தான். மக்கள் நலத்தில் யாருக்கும் அக்கறை இல்லை.
மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்
தன மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்.
நவம்பர் மாதம் ஆரம்பமானதும் வங்கிகளில் பணம் அனுப்பும் நமதூர் பிள்ளைகள் யாராவது இதைப்பற்றி இதே இணையத்தளத்தில் விளக்கம் தரும்படி வேண்டிக் கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross