அக்டோபர் 14, 2014 அன்று Central Board of Excise and Customs என்ற மத்திய அரசு நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவோர் மத்தியில் இது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - தங்களது பணத்தை வங்கிகள் மூலமோ, பிற பணம் மாற்றும் நிறுவனங்கள் மூலமோ
இந்தியாவிற்கு அனுப்பும் போது, அதற்கு 12.36% சேவை வரி (SERVICE TAX) செலுத்த வேண்டுமோ என்ற கேள்வி - அந்த சுற்றறிக்கையை
தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பொதுவாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப - அவர்கள் வாழும் நாட்டில் உள்ள பணம் மாற்றும் நிறுவனத்தை
அணுகுவார்கள். உதாரணமாக - துபையில் உள்ள இந்தியர்கள், இந்தியாவிற்கு 1000 திர்ஹம் அனுப்புகிறார்கள் என்றால், அங்குள்ள ஒரு
நிறுவனம்/வங்கி மூலம், அதற்கான கட்டணம் (உதாரணம் 20 திர்ஹம்) செலுத்தி இந்தியாவிற்கு பணம் அனுப்புவார்கள்.
இந்தியாவில் அந்த பணத்தை - துபையில் உள்ள நிறுவனம் தொடர்பு வைத்துள்ள இந்திய
நிறுவனம்/வங்கி மூலம் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர்
பெறுவார். துபையில் உள்ள நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட அந்த பணத்தை இந்தியாவில் வழங்க, இந்திய நிறுவனம்/வங்கி - சிறு கட்டணம் வசூலிக்கும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய நிறுவனம்/வங்கி பணத்தை இந்தியாவில் விநியோகம் செய்ய வசூல் செய்யும் கட்டணத்திற்குதான்
(COMMISSION/FEE) சேவை வரி விதித்துள்ளது, அனுப்பப்பட்ட மொத்த பணத்திற்கு அல்ல.
உதாரணமாக இந்தியாவிற்கு 100 ரூபாய் அனுப்பப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனை இந்தியாவில் வழங்க இந்திய நிறுவனம்/வங்கி 10 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த சுற்றறிக்கை 10 ரூபாய்க்கு தான் 12.36% சேவை வரி விதிக்கிறது, 100 ரூபாய்க்கு அல்ல.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு - 2011ம் ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்) வந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
சுற்றறிக்கை முழுமையாக
|