ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 5ஆவது பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் மாதம் 07ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 07ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, சிறப்பான முறையில் நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
அபூதபீ - அமீரக வாழ் காயல் மாநகர சகோதர-சகோதரிகள் அனைவரும் தங்கள் குடும்ப சகிதம் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும், நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பல கருத்துகளையும் தர அன்புடன் வேண்டுகிறோம்.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: பழைய ஏர்போர்ட் ரோடு, K.F.C. பார்க் [அல் நூர் மருத்துவமனை அருகில்] அபூதபீ.
குறிப்பு: தங்களின் வருகையை கண்டிப்பாக
ஜனாப் ஹுபைப் 050 - 8490 978
டாக்டர் செய்யித் அஹ்மத் 050 9450 404
ஆகியோருள் ஒருவரிடம் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
நிகழ்வு நாளன்று காலை 10.00 மணி துவங்கி, ஜும்ஆ தொழுகைக்கு முன்பு வரை மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜும்ஆ தொழுகைக்குப் பின் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்தி துறை பொறுப்பாளர்,
காயல் நல மன்றம், அபூதபீ.
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:54 / 28.10.2014] |