காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW ஆலையின் மாசுக்கட்டுப்பாட்டு விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட KEPAவின் அனைத்து செயல்பாடுகள் குறித்தும் வெளியூர்களில் வசிக்கும் அனைத்து காயலர்களுக்கும் விளக்க அதன் செயற்குழுவில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செயற்குழுக் கூட்டம், அமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், துணைத்தலைவர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் முன்னிலையில், காயல்பட்டினம் ஆஸாத் தெருவிலுள்ள KEPA அலுவலக கூட்டரங்கில், இம்மாதம் 04ஆம் நாளன்று நடைபெற்றது.
KEPA செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா கூட்ட அறிமுகவுரையாற்றினார். துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ KEPAவின் இதுநாள் வரையிலான நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். மற்றொரு துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், DCW ஆலைக்கெதிரான வழக்கின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார்.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW ஆலையின் மாசுக்கட்டுப்பாட்டு விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட KEPAவின் அனைத்து செயல்பாடுகள் குறித்தும் வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து காயலர்களுக்கும் விளக்க இக்கூட்டத்தில் செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படையில், ஹஜ் பெருநாளை முன்னிட்டு காயல்பட்டினம் வரும் வெளியூர் காயலர்களை ஒன்றுகூட்டி விளக்கமளித்தல்,
DCW ஆலையுடன் நேரடியாகவோ, மறைமுகமாவோ இணைந்து எந்த பொது நிகழ்ச்சிகளையும் யாரும் நடத்த வேண்டாமெனவும், அதனிடம் எவ்வித உதவிகளைப் பெறவோ, தொடர்பு வைத்துக்கொள்ளவோ வேண்டாமென்றும் - நகரின் அனைத்து பொதுநல அமைப்புகளுக்கும் வேண்டுகோள் வைத்தல்,
செப்டம்பர் 2014 வரையிலான KEPAவின் வரவு-செலவு கணக்குகளை சங்கப் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
வெளியூர் காயலர்களுக்கான விளக்கக் கூட்டம் :
அதன் தொடர்ச்சியாக, ஹஜ் பெருநாளையொட்டி காயல்பட்டினம் வந்திருந்த வெளியூர் காயலர்கள், காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள், அங்கத்தினருக்கு KEPA செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் இம்மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 20.00 மணிக்கு, KEPA அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
ரியாத் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்க தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
புற்றுநோய் காரணி கண்டறியும் நடுவம் – CFFC சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், துபை காயல் நல மன்ற துணைத்தலைவருமான சாளை ஸலீம், துபை காயல் நல மன்ற நிர்வாகி முஹம்மத் யூனுஸ், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் ஹமீத், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) நிர்வாகிகளான மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ, எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீப் மாமுனா லெப்பை, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும், CFFC ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான சாளை நவாஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
KEPAவின் அண்மைச் செயல்பாடுகள், DCWஆலைக்கெதிரான வழக்கின் நடப்பு நிலை, வருங்கால செயல்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPAவின் முந்தைய கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KEPAவின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |