தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் இன்று (அக்டோபர் 30) நள்ளிரவில் துவங்கி, இரவு முழுக்க இடி, மின்னலுடன் இதமழை பெய்தது. இன்று 13.00 மணி நிலவரப்படி, நகரில் சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே சிறுமழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று (அக்டோபர் 30) பெறப்பட்டுள்ள மழைப்பதிவு பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 62.30 மில்லி மீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மாவட்டத்திலேயே இரண்டாவது அதிகபட்ச மழைப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 29ஆம் நாளின் மழை அளவு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |