அண்மையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஷ்மீர் மாநில மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தெருமுனைப் பரப்புரைகள் மூலம் வெள்ள நிவாரண நிதி திரட்டப்பட்டது. அதன் நிறைவில் மொத்தம் ரூபாய் 50 ஆயிரம் தொகை - சென்னையிலுள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமுமுக காயல்பட்டினம் நகர தலைவர் ஏ.பீ.டி.ஜாஹிர், அதன் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் ‘முர்ஷித்’ வசம் தொகையை ஒப்படைத்தார்.
தமுமுக நகரச் செயலாளர் ஆஸாத், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் ஐதுரூஸ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஹஸன், தமுமுக மற்றும் மமக நகர பொருளாளர் எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம், தமுமுக துணைத்தலைவர் காதர், துணைச் செயலாளர் ஷாஹுல் ஹமீத், மருத்துவ அணி செயலாளர் முஜீபுர்ரஹ்மான், இளைஞரணி ஜிஃப்ரீ, சிறப்பு அழைப்பாளர் தமீமுல் அன்ஸாரீ உட்பட தமுமுக - மமக நகர நிர்வாகிகள் இதன்போது உடனிருந்தனர்.
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |