தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் பெய்து வரும் மழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் பல மழை நீர் தேக்கத்திற்குள் மூழ்கியுள்ளன.
கொச்சியார் தெரு, கொச்சியார் கீழத் தெரு ஆகிய தெருக்களின் நடுப்பகுதியில் சுமார் 3 அடி அளவுக்கு மழை நீர் தேங்கியிருந்ததையடுத்து, அதையொட்டிய ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் வெட்டி விடப்பட்டு, மழை நீர் வழிந்தோடச் செய்யப்பட்டது.
சாலை வெட்டப்பட்டிருந்ததால், கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் கடந்து செல்ல, பனை மரக் கட்டைகளைக் கொண்ட பாலம் அப்பகுதி மக்களால் அமைக்கப்பட்டது. நடந்து செல்வோருக்காக அமைக்கப்பட்டிருந்த இப்பாலத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகளும் பொறுப்பற்ற முறையில் கடந்து சென்ற காரணத்தால், ஏற்கனவே பலவீனமான அப்பாலம் எந்நேரமும் விபத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையிலிருந்தது.
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) மூலமாக அப்பகுதி மக்கள் காயல்பட்டினம் நகராட்சிக்குத் தொடர்ந்து வலியுறுத்தியதன் பலனாக, இம்மாதம் 28ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 20.00 மணியளவில், வெட்டப்பட்ட சாலையின் குறுக்கே - கீரிக்குளத்தை நோக்கி மழை நீர் வழிந்தோடுவதற்காக நகராட்சியின் மூலம் தற்காலிகமாக குழாய் பதிக்கப்பட்டு, தோண்டப்பட்ட பள்ளம் மணல் கொண்டு மூடப்பட்டது.
தகவல்:
M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|