காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி - அரபி மொழி பாடத்தில், பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மாணவி ஜெ.எஸ்.ஜுபைதா மஃபாஸா. எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் (ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்) மகளும், எஸ்.ஐ.செய்யித் அஹ்மத் என்பவரின் மனைவியும், அதிமுக காயல்பட்டினம் நகர மூத்த நிர்வாகி காயல் மவ்லானாவின் பேத்தியுமான இவர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் இளங்கலை கணிதம் (B.Sc. Mathematics) பயின்று, அரபி மொழி பாடத்தில் மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளதோடு, தனது பாடப்பிரிவிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இம்மாதம் 29ஆம் நாள் புதன்கிழமையன்று பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இம்மாணவிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழக கல்வியமைச்சர் பழனி மாணிக்கம் அவற்றை வழங்கினார்.
இவர், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில் - பள்ளிக்கூடம் செல்லும் மாணவியருக்கு இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக இயங்கி வரும் முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வானில் ஆசிரியையாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. |