காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், மைக்ரோகாயல், அபூதபீ காயல் நல மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய - மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாமில் 1440 பேர் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, ஷிஃபா நிர்வாகி கண்டி ஸிராஜ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ஷிஃபா அலுவலகம், மைக்ரோகாயல் அலுவலகம், கே.எம்.டி. மருத்துவமனை ஆகிய இடங்களில், கடந்த அக்டோபர் மாதம் 17 முதல் 19ஆம் நாள் வரையிலும் இரத்தசோகை தடுப்பு இலவச முகாம் நடத்தப்பட்டது.
அக்டோபர் 27, 28, 30 நாட்களில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், அதன் முதல்வர் தலைமையில், ஆசிரியையர் மாணவியர் பொறுப்பாளர்கள் வழிநடத்தலில் முகாம் நடத்தப்பட்டது.
இவ்விரு முகாம்களிலும் மொத்தம் 1440 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். அவர்களுள் இரத்த அளவு குறைவாக இருந்தோருக்கு தகுந்த ஆலோசனைகளும், இரும்புச் சத்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் துணைத்தலைவர் ஜெ.செய்யித் ஹஸன், நிர்வாகி கண்டி ஸிராஜ் ஆகியோர் முகாம்களை ஒருங்கிணைத்தனர்.
இதுபோன்ற முகாம்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென பங்கேற்பாளர்கள் கூறினர். தற்போது அபூதபீ காயல் நல மன்றம் இணைந்து நடத்தியது போல, இதர காயல் நல மன்றங்களுடன் ஆலோசனை செய்து. வருங்காலங்களில் ஷிஃபாவுடன் இணைந்து இதுபோன்ற முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும் என ஷிஃபா நிர்வாகி கூறினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிஃபா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மைக்ரோகாயல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |