காயல்பட்டினம் தைக்கா தெருவில் நேற்று (நவம்பர் 03) இரவில் காணக் கிடைத்த காட்சிகள்தான் இவை. இதுபோன்ற காட்சிகளை, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் இளைஞர் ஐக்கிய முன்னணி சந்திப்பு, கடற்கரைப் பகுதி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் அன்றாடம் 22.00 மணிக்குப் பிறகு காண இயலும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், வீட்டு விலங்குகளை வளர்ப்பது அவசியமானதுதான்... ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்க மனமில்லாதவர்கள் அம்முயற்சியில் இறங்கக் கூடாது என்றனர்.
இதுபோன்று நிராதரவாக தெருக்களில் திரியும் வீட்டு விலங்கினங்களை வெறிநாய்கள் கடித்துக் குதறும் நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கின்றன. இதுகுறித்து இத்தளத்தில் ஏற்கனவே பலமுறை செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க: செய்தி எண்: 1726செய்தி எண்: 2332
2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் )[04 November 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 38005
தலைப்பை கொஞ்சம் மாற்றினால் பரவாஇல்லை.
இந்த மாடுகள் எப்பொழுதும் வெளியில் தான் திரிகின்றன. ஆக.. மாட்டின் உரிமையாளர்கள் " வீட்டிற்கு வந்தால் கறந்துக்குவோம் " என்று விட்டு விட்டார்.
போக்குவரத்திற்கு இடைஞ்சலாக திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிப்போம் என்று நம் நகராட்சி அறிவித்ததே..!! என்ன ஆச்சு..!!! எல்லாம் ச்..சும்மா..!! குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டாரை பிடிப்போம் என்பது போல..
உண்டான வேலைகள் செய்யவே ஆட்களும் பற்றவில்லை, நேரமும் பற்றவில்லை... எங்கே மாடு பிடிக்க.!
3. Re:... posted byummuhani kareem (kayalpatnam)[04 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38011
இங்கே மட்டுமா? தாயிம்பள்ளி ஒன் வே ரோட்டில் போர்டை பாதி வைத்துள்ளார்கள். மீதி இடத்தில வழியே வரும்போது 8 மாடுகள் வரிசையாக நிற்கிறது.
மாட்டுக்கு பயப்படவா? வரும் வாகனத்துக்கு பயப்படவா? ஒரே குழப்பம். தவக்கல்து அலல்லாஹ் என்று ஓதி விட்டு வந்தேன்.
கோழி ஆடு மாடு இவைகளெல்லாம் வளர்க்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள்.
பஞ்சாயத்து போர்டு சட்டம் போட்டால் அதற்க்கு எதிராக தான் நடப்போம் என்றால் என்ன செய்ய முடியும்?
எந்த வீட்டின் முன்னாள் மாடு நிற்கிறதோ அவர்கள் பாலை கறந்து கொள்ளலாம் என்று ஒரு சட்டம் போட்டால் மாட்டை
வெளியே விடுவார்கள் என்கிறீர்களா?
பிரமாதமாக தலைப்பு வைப்பவர் இந்த சட்டம் கொண்டு வர முயற்சி செய்வாரா?
4. பூனைக்கு யார் மணி கட்டுவது! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[04 November 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38012
கால்நடைகள் என்றழைப்பதனால் அதன் கால்கள் போகும் திசைக்கு தன் விருப்பம்போல் வலம் வரட்டும் என்று அதன் உரிமையாளர்கள் உதாசீன மனத்துடன் மேய விட்டு விட்டார்களோ?
அப்படியொரு எண்ணமிருந்தால் அவர்களின்அலட்சியத்திற்கு தகுந்த அபதாரத்தை அவர்களிடம் வசூலிக்க வேண்டும் நம் நகராட்சி
நம் நகராட்சியில் ஒட்டுமொத்தமாக ஒருமித்த ஒப்புதளோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்,அதாவது,
> இப்படி வீதியெங்கும் கேட்பாரற்று நடமாடும் மாடுகளை நகராட்சி ஊழியர் ஓட்டிவந்து நகராட்சி கட்டிடத்தில் கட்டிப்போட்டால்,ஒரு மாட்டிற்கு நூறு ரூபாய் அந்த ஊழியருக்கு இனாம் என்று அறிவிக்க வேண்டும்!
>கட்டப்பட்ட மாட்டு உரிமையாளர் மூன்று நாட்களுக்குள் வந்து அழைத்துப்போனால் 500 ரூபாய் அபராதத்தை அவரிடமிருந்து வசூலிக்கவேண்டும்!
>மூன்று நாட்களுக்கும் மேலும் எவரும் வரவில்லை என்றால் , ஒருநாளைக்கு நூறு ரூபாய் வீதம் அபராதத்தைக் கூட்டிக்கொண்டே போய்,கணிசமான தொகை ஏறிவிட்ட பின்னர்,அம்மாட்டை ஏலத்திற்கு விட்டு அந்த தொகையில் 25% சதவீதத் தொகையை அபராதத்தொகையாக மாநகராட்சி எடுத்துக்கொண்டு மீதியை மாட்டு உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும்.என்ற கடுமையான சட்டத்தை தீர்மானமாக நம் நகராட்சியில் நிறைவேற்றிப்பாருங்கள் பலன் கைமேல் கிட்டும்!
அதுசரி,பூனைக்கு யார் மணி கட்டுவது,அவ்வாள் தீர்மானம் கொண்டுவந்தால் இவ்வாள் எதிர்ப்பார்,இவ்வாள் தீர்மானம் கொண்டுவந்தால் அவ்வாள் எதிர்ப்பார்கள்! நடுவில் நாம்தான் வவ்வாளாக தொங்கிக்கொண்டு இருக்கிறோம்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
5. Re:... posted byVilack SMA (Jeddah)[05 November 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38015
கால்நடைகளை " லபக் " பண்ணி நகராட்சி காம்பவுண்டுக்குள் கட்டி வைக்கலாம் . உரிமையாளர் வந்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கலாம் கட்டத்தவறினால் அந்த அனிமல் நகராட்சிக்கு சொந்தம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross