நகராட்சிகள் நிர்வாகத்துறையின் இயக்குனராக 38 வயதான முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஜி.பிரகாஷ் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை நகராட்சிகள் நிர்வாகத்துறையின் ஆணையராக இருந்த சந்திரகாந்த் காம்ப்ளே IAS தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக - ஓர் ஆண்டு அல்லது அதற்கான தேவை இல்லாமால் ஆகும் வரை, இதில் எது முந்தியதோ அது வரை - உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்பத்தூரை சார்ந்த ஜி.பிரகாஷ் IAS, 2000ம் ஆண்டு IAS பதவிக்கு தேர்வானார். இரு ஆண்டுகளுக்கான பயிற்சி நிறைவுற்றப்பின் 2002 முதல் 2004 வரை தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக பணிப்புரிந்தார்.
2004 ஜூலை முதல் 2004 டிசம்பர் வரை அருப்புக்கோட்டை மாவட்ட துணை ஆட்சியராக பணிப்புரிந்த இவர், கன்னியாக்குமரி மாவட்ட கூடுதல் ஆட்சியராக மே 2006 வரையிலும் பணியாற்றினார்.
மே 2006 முதல் பிப்ரவரி 2009 வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியப்பின், தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றலானார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக அக்டோபர் 2010 வரை பணியாற்றியப்பின், தொழில் துறையின் இணைச் செயலாளராகவும், அதன் பின் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் இயக்குனராகவும், பின்னர் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|