பள்ளிகள் அளவிலான வினாடி-வினா போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதுகுறித்து, பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
மார்வெல் 2014 சார்பில், பள்ளிகள் அளவிலான வினாடி-வினா போட்டி, தூத்துக்குடி பி.எம்.சி.மெட்ரிகுலேஷன் பள்ளியில், 31.10.2014 அன்று நடைபெற்றது. இதில், எம் பள்ளியின் 11ஆம் வகுப்பைச் சேர்ந்த 22 மாணவியர் 11 பிரிவுகளாகப் பங்கேற்றனர்.
அவர்களுள், 2 பிரிவுகளின் 4 மாணவியர் இரண்டாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஏ.கே.சித்தி மதனீ, எம்.ஏ.ஃபாத்திமா ஷரஃபிய்யா ஆகிய இரு மாணவியர், முதல் சுற்றில் வென்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இறுதிச் சுற்று, இம்மாதம் 11ஆம் நாளன்று, அருப்புக்கோட்டை ஸ்ரீ சவுடாம்பிகை பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |