தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் வரை கிழக்கு கடற்கரை சாலை நீட்டிக்கப்படவுள்ளது. சுமார் 119 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையை அமைக்க, தமிழக அரசு சுமார் 257 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டிவுள்ளது. இந்த சாலை, முத்தையாபுரம், முக்காணி, ஆத்தூர், திருச்செந்தூர், குலசை, மணப்பாடு, பெரியதாழை - வழியாக அமையும்.
இந்தப் பாதையில் அமைந்துள்ள சாலையை அகலப்படுத்த, நில ஆர்ஜித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
மேல ஆத்தூர், ஆத்தூர் கஸ்பா, கந்தசாமிபுரம் மற்றும் மணப்பாடு பகுதிகளில் இத்திட்டத்திற்காக ஆர்ஜிதம் செய்யவுள்ள இடங்கள் குறித்த விபரங்கள் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியாகியுள்ளது.
மேல ஆத்தூர்
ஆத்தூர் கஸ்பா
கந்தசாமிபுரம்
மணப்பாடு
தகவல்:
THE NEW INDIAN EXPRESS (07-11-2014) |