காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த கலங்கரை விளக்கம் மகளிர் குழுவினர், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று 14.00 மணி துவங்கி 16.30 மணி வரை துப்புரவுப் பணியாற்றினர்.
ஐஸ் க்ரீம் உரைகள், சுண்டல் தட்டுகள், தேனீர் கோப்பைகள், தண்ணீர் உறைகள் என கடற்கரையில் தேங்கியிருந்த காகித மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகள் அனைத்தையும் அவர்கள் மொத்தமாகச் சேர்த்து, நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஊக்கப்படுத்தி, தூண்டியதன் பேரில் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைதோறும் கடற்கரையில் துப்புரவுப் பணி மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர்கள், வரும் 15ஆம் நாள் சனிக்கிழமையன்று, தாம் வசிக்கும் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரைப் பகுதியைத் துப்புரவு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.
துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கலங்கரை விளக்கம் மகளிர் குழுவினரை, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நேரில் சந்தித்து, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்ததுடன், மக்கள் நலன் கருதி அவர்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளுக்கும் நகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பளிக்கும் என்றும் கூறினார்.
படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
கலங்கரை விளக்கம் மகளிர் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் கடற்கரை பராமரிப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |