திருச்செந்தூர், சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதிகளின் முன்னாள் உறுப்பினர் தியாகி எம்.எஸ்.செல்வராஜ் மனைவி, எம்.எஸ்.எஸ்.லெட்சுமி பாக்கியம் அம்மாள், இன்று (நவம்பர் 11 செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணியளவில், அவரது சொந்த ஊரான ஆறுமுகநேரியில் காலமானார். அவருக்கு வயது 90. அன்னார்,
அரிமா சங்க பட்டயத் தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முக வெங்கடேசன் (தொடர்பு எண்: +91 99425 26666), வெளிநாட்டில் பணிபுரியும் பொறியாளர் எம்.எஸ்.எஸ்.சிவராம குமார், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.கார்த்திகேயன் (தொடர்பு எண்: +91 94438 72197) ஆகியோரின் தாயார் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள், நாளை (நவம்பர் 12 புதன்கிழமை) 13.00 மணியளவில், ஆறுமுகநேரி - கீழ வீடு என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தியாகி எம்.எஸ்.செல்வராஜ், கடந்த 2000ஆம் ஆண்டில் காலமானது குறிப்பிடத்தக்கது. |