Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:37:04 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14865
#KOTW14865
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 12, 2014
தமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் வாவு புகாரீ காலமானார்! கூடுதல் தகவல்களுடன்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5015 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - தமுமுகவின் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் தலைவர் - காயல்பட்டினம் காயிதேமில்லத் நகர் 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஹாஜி டபிள்யு.கே.செய்யித் முஹம்மத் புகாரீ என்ற வாவு புகாரீ, இன்று (நவம்பர் 12 புதன்கிழமை) 04.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72. அன்னார்,

மர்ஹூம் வாவு காதிர் ஸாஹிப் அவர்களின் மகனும்,

மர்ஹூம் உடல்கட்டி முஹம்மத் மீராஸாஹிப் அவர்களின் மருமகனாரும்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் (தொடர்பு எண்: +91 97881 31176), மர்ஹூம் ஹாஜி வாவு முஹம்மத் சுலைமான் ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி எஸ்.ஏ.அஷ்ரஃப், எம்.எம்.எஸ்.ஷேக் அப்துல் காதிர், எம்.எம்.எஸ்.இப்றாஹீம் அத்ஹம் ஆகியோரின் மச்சானும்,

எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல் என்பவரின் மாமனாரும்,

வாவு எஸ்.எம்.பி.காதிர் ஸாஹிப், வாவு எஸ்.எம்.பி.முஹம்மத் மீராஸாஹிப், வாவு எஸ்.எம்.பி.முஹம்மத் ஹஸனாலெப்பை, வாவு எஸ்.எம்.பி.அப்துல் கஃப்பார், வாவு எஸ்.எம்.பி.முஹம்மத் சுலைமான் ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 20.00 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
சொளுக்கு S.S.M.செய்யித் முஹம்மத் ஸாஹிப்

படம்:
S.A.இப்றாஹீம் மக்கீ


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:04 / 13.11.2014]

----------------------------------------------------------------------------------------------------------

நல்லடக்கத்திற்குப் பின் இணைக்கப்பட்ட கூடுதல் தகவல்கள்:

ஜனாஸா, நவம்பர் 12 புதன்கிழமையன்று 20.15 மணியளவில், காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரிலுள்ள அவரது இல்லத்திலிருந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் குருவித்துறைப் பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.







20.45 மணியளவில் நடைபெற்ற ஜனாஸா தொழுகையை, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் வழிநடத்தினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆஸாத், மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், நகர நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்,ஷேக் முஹம்மத் உட்பட திரளானோர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் மவ்லவீ ஜெ.எஸ்.ரிஃபாயீ ரஷாதீ, மறைந்தவரின் இல்லத்தில் ஜனாஸாவைப் பார்த்துச் சென்றார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [12 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38107

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed salih (chennai) [12 November 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38108

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [12 November 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38109

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by thymiah (chennai) [12 November 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38110

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் , அவரின் மறுமை வாழ்வு சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சிறந்த களப்பணியாளர்
posted by பாளையம் சதக்கத்துல்லா (தமாம், சவுதி அரேபியா) [12 November 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38111

சமுதாயத்தின் மீது பற்று மிக்கவர். சிறந்த களப்பணியாளர். சமீபத்தில் அவர் வீட்டுக்கு சென்ற நேரத்தில் சமுதாய சிந்தனையே அவரின் பேச்சில் அதிகமாக வெளிப்பட்டது. அல்லாஹ் அவருடைய நற்செயல்களை பொருந்தி கொள்வானாக! அவரின் கப்ர் வாழ்கையை வெளிச்சமாக்கி, மறுமையில் ஜன்னத்துல் பிஃர்தௌசை பாக்கியமாக்கி வைப்பானாக! அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமுமுக சகோதரர்களுக்கும் மன நிம்மதியை அளிப்பானாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [12 November 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38112

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [12 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38113

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இஅலிஹி ராஜிவூன்.

இறையடி சேர்ந்துவிட்ட (தமுமுக நகர கிளைமுன்னாள்தலைவர்) வாவு புகாரீஹாஜி அவர்களின் பிழைகளைப்பொறுத்து ஆற்றியயசேவைகளுக்கு நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கும்,கட்சிசகோதர்,தோழ தொண்டர்களுக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அவர்களின் இடத்திற்குத்தகுந்தாற்போல் நிறைவானவரைக்கொடுத்து பூர்த்தியாக்கிக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,

ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [12 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38114

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் சுவனபதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக.

السلام عليكم ورحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [12 November 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38115

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

-சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [12 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38116

மரியாதைக்குரிய புஹாரி காக்கா அவர்கள் அமைதி மற்றும் கண்ணியத்தின் இலக்கணமாக வாழ்ந்தார்கள்.இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து சொர்க்கத்தை சொந்தமாகுவானாக,அவர்கள் பிரிவால் வாடும் அவர்களின் மக்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் சலாதினையும் ஆழ்ந்த இரங்கலையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Assalamu alaikkum
posted by Muhammad Shameem (Hong Kong) [12 November 2014]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 38125

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by mohideen thambi sam (jeddah) [12 November 2014]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38128

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.

mohideen thambi sam jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by A.S.KALEELUR RAHMAN (AL-HASA-SAUDI ARABIA.) [12 November 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38130

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக – ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [12 November 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 38132

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Abdul Azeez (chennai) [12 November 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38133

அஸ்ஸலாமு அலைக்கும்

சமுதாயத்தின் மீது பற்று மிக்கவர். சிறந்த களப்பணியாளர். IIM பைத்துல்மால் போன்ற சம்ய்தய சேவைகளில் நீண்டகாலமாக உழைத்து வந்தவர் அல்லாஹ் அவருடைய நற்செயல்களை பொருந்தி கொள்வானாக!

அவரின் கப்ர் வாழ்கையை வெளிச்சமாக்கி, மறுமையில் ஜன்னத்துல் பிஃர்தௌசை பாக்கியமாக்கி வைப்பானாக! அவரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் மன நிம்மதியை அளிப்பானாக! ஆமீன் வஸ்ஸலாம்

A G அப்துல் அஜீஸ்

Admin கவனத்திற்கு : விரிவான செய்திகள் பின்னர் தெரிவிப்பதாக தெருவிதீர்கள் தயவு செய்தி அவர்களது பிள்ளைகள் போன்ற விவரங்கள் தெருவித்தால் நன்றாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [12 November 2014]
IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 38137

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. அதிர்ச்சியான செய்தி...!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்.) [12 November 2014]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 38141

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எங்கள் தெருவைச் சார்ந்த அருமை புஹாரிக்காக்காவின் வஃபாத் செய்தி அறிந்து அதிர்ச்சியில் உறந்து போனேன். நெருங்கிய பழக்கமுள்ள மனிதர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவி செய்யும் உபகாரி! எங்கள் குடும்பத்தில் ஒருவராய் எல்லாக் காரியங்களிலும் கலந்து கொள்வார். எளிமையானவர், இனிமையானவர், இறைவனின் நாட்டம் இன்று அவர் பிரிந்து விட்டார்.

எல்லாம் வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமையில் மேலான நற்கூலியையும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியத்தையும் வழங்கியருள்வானாக ஆமீன்.

அன்னாரின் மனைவி, மக்கள், உற்றார் உறவினர்களுக்கு மேலான பொறுமையை வல்ல நாயன் வழங்கியருள்வானாக ஆமீன்.

கனத்த நெஞ்சுடன்,
M.N.L.முஹம்மது ரபீக்
மற்றும் குடும்பத்தினர்,
அம்பலமரைக்காயர் தெரு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.Re:...
posted by Hussain Hallaj B M (Qatar) [12 November 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 38143

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.

ஹுசைன் ஹல்லாஜ்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஆழ்ந்த இரங்கல்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [12 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38144

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !!!!

மர்ஹூம் புஹாரி காக்கா அவர்கள் பாம்பே யில் இருந்த சமயத்தில் அவர்களோடு நான் நெருங்கி பழகியவன். மிகவும் நல்ல மனிதர், பண்பாளர், எவ்வளவோ அறிவுரைகள் தந்து உதவியவர்கள், மற்றவர்கள் பற்றிய பேச்சு பிடிக்காதவர்கள், மிக முக்கியமாக கொடுக்கல் வாங்கலில் மிகவும் கண்டிப்பானவர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமையில் சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். யாவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும்...

சாளை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Meeran (ETA CHENNAI) [13 November 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 38145

i need a clear picture for confirmation

Moderator: கிடைக்கப்பெற்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. தெளிவான படம் பெறப்பட்டதும் வெளியிடப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. பாசமுள்ள தோழப்பா...
posted by S.K.Salih (Kayalpatnam) [13 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38150

என் அன்புத் தந்தை மர்ஹூம் எஸ்.கே. அவர்களின் ஒத்த வயதுடைய மிக நெருங்கிய தோழர்களுள் புகாரீ மாமாவும் ஒருவர்.

தன் வாழ்வில் ஆயிரம் அவதிகளைச் சந்தித்தபோதும் சிறிதும் அதை வெளிக்காட்டாத தோழப்பா அவர்கள், தனக்குத் தெரிந்து யாரேனும் சுகவீனப்பட்டாலோ, படிப்புக்கு பணம் கட்ட வழியின்றி அவதிப்பட்டாலோ உடனடியாக களமிறங்கி, அவர்களுக்குத் தேவையான மனுவை அழகாக வடிவமைத்து, அவர்களையும் நேரில் அழைத்து வந்து, பொதுநல அமைப்புகளிடம் வழங்கி, தனது நம்பிக்கையின் அடிப்படையில் பரிந்துரையும் செய்வார். இவ்வாறு, தோழப்பா அவர்கள் மூலமாகப் பயன்பெற்ற ஏழை - எளியோர் நமதூரில் ஏராளம் உள்ளனர்.

உதவிகளை வாங்கிக் கொடுப்பதில் அவர்கள் காட்டிய அதே ஆர்வத்தை, அவ்வுதவிகளைப் பெற அவர்கள் தகுதியானவர்கள்தானா என்று ஆராய்வதிலும் தீவிரமாகக் காட்டினார்.

இக்ராஃ கல்விச் சங்கத்தின் துவக்க காலத்தில், ஏழை மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகைக்காக தன் பொறுப்பில் விண்ணப்பமளித்திருந்தார். ஆனால் அம்மாணவிக்குத் திடீரென திருமண ஏற்பாடு ஆனதால், முதலாமாண்டுடன் கல்லூரிப் படிப்பை நிறுத்திக்கொண்டார். அவருக்கு இக்ராஃவிலிருந்து (ஓராண்டுக்கு) ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தது.

மாணவி படிப்பை இடைநிறுத்தம் செய்ததையறிந்தவுடன், சிறிதும் தாமதிக்காமல் அவரது இல்லம் சென்ற தோழப்பா அவர்கள்,

“தாயீ, நீ நல்லா படிச்சி, குடும்பத்தைக் காப்பாத்துவாய் என்றுதான் நான் உனக்கு உதவித்தொகைக்கு முயற்சி செய்தேன்... ஆனால் இப்போது நீ இடைநிறுத்தம் செய்துவிட்டதால், உனக்கும் அந்தப் பணத்தால் பயனில்லாமல் போய், இன்னொரு மாணவனுக்கோ, மாணவிக்கோ கிடைக்க வேண்டிய தொகையும் உன்னால் தடுக்கப்பட்டுவிட்டது... எனவே, சிரமம் பாராமல், நீ வாங்கிய 5 ஆயிரம் ரூபாயைத் தந்துவிடுமா... அப்படிச் செய்தால்தான், என்னை பொதுநல அமைப்புகள் நம்பும்... எனக்கும் இன்னும் நான்கு பேருக்கு உதவ முடியும்...” என்று கூறி, பணத்தைப் பெற்று, இக்ராஃவில் கொடுத்தார்.

என் தந்தையை ஒருமையில் பேசி, உரிமையோடு கண்டித்த தோழப்பாக்களுள் எஞ்சியிருக்கும் ஓரிருவருள் இவர்களும் ஒருவர். இவர்களின் மனைவியார், என் தாயாருடன் பள்ளியில் ஒரே வகுப்பில் பயின்ற நெருங்கிய தோழி.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் புகாரீ தோழப்பா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் உடன்பிறந்த சகோதரரும், நான் சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர தலைவருமான வாவு நாஸர் ஹாஜி உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. மறக்க முடியவில்லை..
posted by Abdul Cader S.H. (Jeddah) [14 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38151

1982- ல் நான் பம்பாயில் இருந்த போது அறிமுகமான மதிப்பிற்குரிய அருமை உடன் பிறவா சகோதரர் வா.வு. புகாரி அவர்களும், நானும் அரபு தேசம் வருவதற்காக நாங்கள் Telephone/Telex operator, institute - ல் பயின்று வந்ததுடன், பல ஏஜென்டிடம் அலைந்தோம். அதன் பின் நான் டெஹ்ரானிர்க்கும், அவர் ரியாதிற்கும் சென்று விட்டாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அதன் பிறகு 10 வருடங்களுக்கு பின் அவருடன் சிங்கப்பூர் மற்றும் பாங்காக் சென்று வரும் வாய்பையும் பெற்றேன்.

இனிமையாக பழகும் நல்ல பண்பாளர். செய்த காரியத்தை நடத்தி முடிப்பார். தம்பி எஸ்.கே.சாலிஹ் குறிப்பிட்டது போல், பல நல்ல காரியங்களை மவுனமாக செய்து முடித்திருக்கிறார்.

நான் ஊர் வரும் பொழுதெல்லாம் என்னையும் வறியவர் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவ்வீட்டு தேவை அறிந்து உடன் அங்கு வைத்து மனு எழுதி ஜமாஅத் கை எழுத்தும் வாங்கி என்னிடம் தந்து அனுப்பி "வீட்டு நிலைமையை பார்த்து விட்டிங்க மன்றத்தில் எடுத்து சொல்லி உடன் உதவி செய்யுங்க" என்று தன் சொந்த சகோதரிக்கு கேட்பது போல் விரும்பி கேட்டுக்கொள்வார். அதன் படி மன்றத்தால் அவர் மனு மூலம் நிறைய ஏழைகள் பயன் பெற்றனர்.

அது மற்றுமா, என் குடும்பத்தில் ஒருவனாக தன்னை இணைத்துக் கொண்டு, என் மாமா (மர்ஹூம்) பாளையம் அஹமது சுலைமான் அவர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய நேரத்தில் எங்களோடு கடைசி வரை, இருந்து நல்லடக்கம் செய்யும் வரை ஒன்றாக உறுதுணையாக இருந்து எங்களுக்கு ஆறுதல் தந்தவர்.

சிலோன் அகதியாக வந்து எங்கள் குடும்பத்து உறுப்பினர்களாக பழகிய அந்த அகதி குடும்பத்திற்கு ஓடோடி வந்து பல முறை, பலரிடம் பெற்று உதவி செய்தவர். அவர்கள் மீண்டும் சிலோன் செல்ல வழி வகை செய்தவர். அவர்களுக்கு இந்த தகவலை சொன்னதும் தன் சொந்த சகோதரனை இழந்தது போல் பதறி துடித்தார்கள்.

என் வீட்டிற்க்கு வந்து மனு எழுதும் பழக்கம் கொண்டவர் எங்கள் சுற்று வட்டாரத்திற்க்கே உதவியாக இருந்தவர். இன்னும் எத்தனையோ அடுக்கலாம், அப்படி பட்ட நல்ல மனம் படைத்த, தயாள குணம் கொண்டவர். எங்கள் அம்பலமரைக்காயர் தெருவை சார்ந்த சகோதரர் இன்று நம்முடன் இல்லையே என்று நினைக்கும் போது எங்கள் இதயம் விம்முகின்றது.

என்ன செய்வது? இறைவனின் கட்டளைக்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும், என சபூர் செய்து கொண்டோம். இது போல் குடும்பத்து உறுப்பினர்களும், சபூர் எனும் பொறுமையை கடை பிடித்து மர்ஹூம் அவர்களுக்காக துஆ இறைஞ்சுவமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் அழகிய பூங்காவனத்தில் இடம் அளித்து நல்லடியார்களுடன் அமர வைப்பானாக! ஆமீன்.!!

குடும்பத்தினர் யாவருக்கும் எங்களின் நற்சலாம்.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

மறக்க இயலா மனதுடன்...
அப்துல்காதர் S.H. மற்றும் குடும்பத்தார்
அல்-நயீம், ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:.ஏழைகளின் வழிகாட்டி .....
posted by A.Tharvesh Mohammed (Kayalpatnam) [14 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38152

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் வாவு புஹாரி ஹாஜி அவர்கள் மிகவும் மென்மையானவர். சமுதாயத்தின் மீதும் குறிப்பாக ஏழை எளியோர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் வந்து உலகக் காயல் நல மன்றங்களின் இ மெயில் முகவரிகளை பெற்றுச் சென்று ஏராளமான ஏழைகளுக்கு குறிப்பாக ஆதரவற்ற மற்றும் விதவைப் பெண்களுக்கு சிறுதொழில், மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் பெறுவதற்கு தொடர்ந்து வழிகாட்டியவர்.

இவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியில் பல பெண்கள் தையல் இயந்திரம், கிரைண்டர், ஓவன் போன்ற பொருட்கள் காயல் நல மன்றங்கள் மற்றும் அமைப்புகளின் மூலம் கிடைக்கப் பெற்று இன்றும் தொழில் செய்து குடும்ப ஜீவனம் நடத்தி வருகின்றனர். இது மட்டுமல்ல பள்ளியில் பயிலும் இவர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் பாட நோட்டுக்களை அமைப்புகள் மூலம் வாங்கிக் கொடுத்துள்ளார்கள்.

சமீப காலத்தில் தங்களது இயலாத நிலையிலும் கூட ஏழைகளுக்கான வழிகாட்டும் பணியினை சிரமம் பாராது செய்து வந்தார்கள். இக்ராஃ கல்விச் சங்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பகுதியில் உள்ள மற்றும் அவர்களுக்கு அறிமுகமான இக்ராஃ உறுப்பினர்களின் முகவரிகளைப் பெற்றுச் சென்று அவர்களிடம் உறுப்பினர் சந்தாவைப் பெற்றுத் தருவார்கள்.

இக்ராஃ அலுவலகத்திற்குள் நுழையும் போதே ''இஞ்சி டீ கிடைக்குமா'' என்று கேட்டுக் கொண்டு புன்னகையுடனே வருவார்கள். நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். சமுதாயச் சிந்தனையும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் எப்போதும் மேலோங்கி இருக்கும்.

ஏழை-எளியோருக்கான உதவிகள் குறித்த ஏராளமான தகவல்களை பெற்றுச் சென்று மற்றவர்களுக்கு எத்தி வைப்பார்கள். அவர்கள் இக்ராஃ அலுவலகம் வரும்போதும் சரி, சாலையில் எங்கு கண்டாலும் சரி அவர்களை என் பைக்கில் ஏற்றிச் சென்று அவர்கள் இல்லம் விட்டு வருவேன் ஏராளமான சமயங்களில்! பொது நலனுக்காக, ஏழைகளுக்காக பணியாற்றும் அவர்களை அழைத்துச் சென்று இல்லம் சேர்ப்பிப்பதை ஒரு பாக்கியமாகவே கருதினேன். என்னை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி, எனக்காக அடிக்கடி துஆ செய்வார்கள்.

அவர்களின் மறைவு குடும்பத்தினர்களுக்கு மட்டுமல்ல, பொது நல சேவகர்கள் மற்றும் வழிகாட்டலுக்காக ஏங்கித் தவிக்கும் ஏழை எளியோர்களுக்கும் இழப்புதான்.

கருணையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவனளவில் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியிலே அவர்களை தங்கச் செய்வானாக.

அன்னாரின் மண்ணறையை பிரகாசமாகவும், விசாலமாகவும் ஆக்கிடுவானாக. அன்னாரின் மறைவால் வாடும் அவர்கள்தம் குடும்பத்தினர்களுக்கு அழகான பொறுமையை வழங்குவானாக. ஆமீன்.

A.தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...இன்னா லில்லாஹி....
posted by Ashima Abdul Cader S.H. (Jeddah) [14 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38153

அன்பு சகோதரர் புஹாரி அவர்களின் திடீர் வாபத் செய்தி அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கண்ணியமாக பழகக்கூடிய நல்ல பண்பாளர். நல்லதே பேசுவார்கள். உள்ளதைச் சொல்வார்கள். பிறருக்கு ஓடி ஓடி உதவி செய்வதில் முதன்மையானவர்.

சுகக்குறைவால் K.M.T. மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த செய்தி அறிந்து, கடைசியாக சகோதரரிடம் கை அடக்க தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு, நானும் என் கணவரும் பேசிய வார்த்தைகள் இன்றும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது,

அவர்கள் மஃக்பிரதிர்க்காக படைத்தவனிடம் துஆ செய்து சபூர் செய்துக்கொண்டேன்.

அன்னாரது மனைவி, மக்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் என் சாலத்தினை தெரிவிப்பதுடன், சபூர் எனும் பொறுமையை கடை பிடித்து மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ கேட்போம்.

அல்லாஹ், அவர்கள் செய்த நல்ல செயல்களை கொண்டும், மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானகவும்! ஆமீன். !!

துஆக்களுடன்,
ஆஸிமா அப்துல்காதர் S.H.
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [19 November 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38187

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 November 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38199

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்<<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நவ.11 நள்ளிரவில் கனமழை!  (13/11/2014) [Views - 2965; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved