காயல்பட்டினம் கடற்கரையில் குழுமியிருந்த பொதுமக்களிடம், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் இன்று 16.30 மணியளவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, அன்றாட வாழ்வில் பேணப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், டெங்கு காய்ச்சல் குறித்தும், குறிப்பாக மழைக்காலத்தில் அது பரவும் விதம் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
நிறைவில், டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரம் - குழுமியிருந்த பொதுமக்களுக்கும், கடற்கரை வணிகர்களுக்கும் வினியோகிக்கப்பட்டது.
படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
காயல்பட்டினம் நகராட்சியின் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |