இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களது கூட்டத்தாரையும் எதிரிகளிடமிருந்து இறைவன் காப்பாற்றிய நாள் முஹர்ரம் 10 என்ற வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் முஹர்ரம் மாதம் 09, 10 நாட்களில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பது வழமை.
நடப்பாண்டில், நவம்பர் 03, 04ஆம் நாட்களில் முஹர்ரம் 09, 10 நாட்கள் என்ற அறிவிப்பின் அடிப்படையில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் அவ்விரு நாட்களிலும் மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்ட இந்நிகழ்வில், அந்நாட்களில் நோன்பு நோற்றிருந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முதல் நாளன்று, லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் சார்பிலும், இரண்டாவது நாளில் துபை வாழ் மகுதூம் ஜும்ஆ பள்ளி ஜமாஅத்தினர் சிலர் சார்பிலும் செலவினங்களுக்கு அனுசரணை செய்யப்பட்டிருந்தது.
படங்களுள் உதவி & தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ மூலமாக
லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன்
ஆஷூறா நாளை முன்னிட்டு, மகுதூம் ஜும்ஆ பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 00:35 / 08.11.2014] |