இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த அக்டோபர் மாதம் 05ஆம் நாளன்று 14ஆவது மாரத்தான் நீள் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
21.097 கிலோ மீட்டர் அளவைக் கொண்ட Half Marathon போட்டி, 42.196 கிலோ மீட்டர் அளவைக் கொண்ட Full Marathon போட்டி என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தென் அமெரிக்கக் கண்டம் தவிர, இதர அனைத்துக் கண்டங்களைச் சேர்ந்த 29 நாடுகளிலிருந்து பங்கேற்ற 200 வீரர்கள் உட்பட, மொத்தம் 5500 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
Full Marathon போட்டி, கொழும்பு விடுதலை சதுக்கத்தில் துவங்கி, நீர்க்கொழும்பு கடற்கரை பூங்கா வரை 42.196 கிலோ மீட்டர் கொண்டதாகும்.
காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த அபூ முஹம்மத் என்பவரது மகன் பதுர் சுலைமான் (தொடர்பு எண்: +91 96777 37550) என்பவரும் Full Marathon போட்டியில் பங்கேற்று, போட்டி எல்லையை முழுமையாக ஓடிக் கடந்தார். அதற்காக அவருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
தான் பணிபுரியும் செஷல்ஸ் நாட்டில் நடைபெற்ற பல்வேறு மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் இவர், இன்னொரு நாட்டில் நடைபெறும் போட்டியில் முதன்முறையாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்களுள் உதவி:
A.K.இம்ரான்
2012ஆம் ஆண்டு செஷல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பதுர் சுலைமான் பங்கேற்றது குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |