தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், கடந்த அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீவிரவாத எதிர்ப்பு பரப்புரை தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அதன் தலைவர் ஷம்சுத்தீன் தலைமையில், நிர்வாகிகளான சாளப்பா, ஜப்பான் சுலைமான், ஹனீஃபா, ஸலாஹுத்தீன், ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி இமாம் சாமு ஷிஹாபுத்தீன் உள்ளிட்டோரடங்கிய குழுவினர், இம்மாதம் 02ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை, காயல்பட்டினம் சிவன்கோயில் தெரு, இரத்தினபுரி, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை உள்ளிட்ட புறநகர் பகுதிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரப்புரை செய்தனர்.
இப்பரப்புரையின்போது, தீவிரவாதத்தை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
படங்கள்:
எலக்ட்ரீஷியன் ஸலாஹுத்தீன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |