கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 09ஆம் நாளன்று நடைபெறவுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்தும், அந்நாளன்று தயாரிக்கப்படும் களறி உணவு வீடுகளுக்குத் தேவைப்படுவோர் முன்பதிவு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்வா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அன்பின் மலபார் காயல் நல மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது மலபார் காயல் நல மன்றம் (MKWA) வின் செயற்குழுக் கூட்டம் 19-10-2014 அன்று, மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் தலைமையில் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் 09-11-2014 அன்று மன்றத்தின் 14ஆவது பொதுக்குழு கூட்டம் நடத்துவதெனவும்,
அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் அமைப்பது பற்றியும் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கென்று உணவு கமிட்டி அமைப்பது பற்றியும் விரிவாக பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சகோதரர் நெய்னா காக்கா அவர்கள் வீட்டு மாடியில் நடைபெறும் பொதுக்குழு நிகழ்ச்சியில்,.மலபார் (கேரளா) சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் காயல்வாசிகள் அனைவர்களும் தவறாமல் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் அனைவர்களுக்கும் காயல் களறி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழு சரியாக காலை 10.30 மணிக்கு துவக்கப்படும்.இன்ஷாஅல்லாஹ்.
குறிப்பு:-
களறி சாப்பாடு வீடுகளுக்கு தேவைப்படுபவர்கள் முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம். இதுகுறித்த விபரம் அறிந்துகொள்ள, செயற்குழு உறுப்பினர் ஜனாப் சாஹிப் தம்பி (தொடர்பு எண்: +91 94473 13386) அவர்களை 05-11-2014க்குள் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யது ஐதுரூஸ் (சீனா)
செய்தித் தொடர்பாளர்
மலபார் காயல் நல மன்றம் - கோழிக்கோடு
மலபார் காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மலபார் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |