காயல்பட்டினத்தில், நடப்பாண்டிற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாம் இம்மாதம் 15ஆம் நாள் துவங்கி, வரும் நவம்பர் மாதம் 10ஆம் நாள் வரை நடைபெறுவதாக, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு உதவி அலுவலராக இருக்கும் திருச்செந்தூர் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
இந்திய தேர்தல் ஆணையத்தின்படி காயல்பட்டினம் பகுதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 15.10.2014 முதல் 10.11.2014 முடிய வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2014-2015 நடைபெற்று வருகின்றது.
01.01.2015ஐத் தகுதி நாளாகக் கொண்டு - 31.12.1997க்கு முன்னர் பிறந்தவர்கள் வாக்காளராகப் பதிவு செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க படிவம் 6,
பெயர் திருத்தம் செய்ய படிவம் 8,
முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ
ஆகிய படிவங்களைப் பொதுமக்கள் பெற்று, அந்தந்த வாக்குச்சாவடிகளில் 09.30 மணி முதல் 17.00 மணி வரை மனுக்களை அளிக்கலாம். 01.11.2014 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |