கத்தர் காயல் நல மன்ற பொருளாளர் அஸ்லம் (தொடர்பு எண்: +974 550 660 71) உடைய தாய்மாமா ஹாஜி கே.ஏ.எல்.மொகுதூம் முஹம்மத் அவர்கள், இம்மாதம் 05ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை 02.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 71. அன்னார்,
கே.எம்.எம்.அஹ்மத் லெப்பை (தொடர்பு எண்: +91 94449 77153), ‘தனுப்’ கே.எம்.எம்.முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 94443 84910), கே.எம்.எம்.ஆயிஷா, கே.எம்.எம்.ஆதம் ஹவ்வா ஆகியோரின் தந்தையாவார்.
இதுகுறித்து, குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது:-
சென்னை கே.ஏ.எஸ்.ஜெய்னுலாப்தீன் கம்பெனியைச் சேர்ந்த ஹாஜி கே.ஏ.எஸ்.மொகுதூம் முஹம்மத் அவர்கள், 04.11.2014 அன்று சென்னையிலிருந்து, செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் காயல்பட்டினம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அவருடன், அவரது உடன்பிறந்த சகோதரர் கே.ஏ.எல்.முஹ்யித்தீன் தம்பி, பட்டறை எம்.ஏ.மஹ்மூத் ஆகியோரும் உடன் பயணித்தனர்.
மறுநாள் 05.11.2014 அன்று அதிகாலை 02.35 மணியளவில் வண்டி திண்டுக்கல்லை நெருங்குகையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, வண்டியிலேயே உயிர் பிரிந்தது. உடனடியாக, திண்டுக்கல்லிலிருந்த தோல் வணிகர் பொக்கு ஹஸனா லெப்பை என்பவருக்குத் தகவல் தரப்பட்டதன் அடிப்படையில், ஆம்புலன்ஸ் வாகனத்துடன் அவர் திண்டுக்கல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்தார்.
திண்டுக்கல் தொடர்வண்டி நிலையத்தில், தொடர்வண்டித் துறை காவலர்களின் துணையுடன் உடல் இறக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் காயல்பட்டினம் அனுப்பி வைக்கப்பட்டது. 05.11.2014 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின், குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. |