காயல்பட்டினம் நகராட்சியின் 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையருக்கு - அக்டோபர் 27 தேதியிட்ட மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
பெறுனர் :-
உயர்திரு ஆணையர் மற்றும் மதிப்பிற்குறிய நகராட்சி தலைவி அவர்கள்,
காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சி
ஐயா,
எனது 5-வது வார்டுக்குற்பட்ட ஆறாம்பள்ளி தெரு புதிதாக அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரி பெறப்பட்டுள்ள நிலையில், பணிஆணை வழங்குவதற்காக அந்த பொருள் கடந்த கூட்டத்தில் இணைக்கப்படவில்லை. எனவே அடுத்து நடைபெற உள்ள கூட்டத்தில் அப்பொருளினை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது 5-வது வார்டுக்குற்பட்ட மகுதூம் தெருவில் அதிகமாக மணல் காணப்படுவதால் உடனடியாக அம்மணல்களை அப்புறப்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தெருவிளக்குகள் பராமரிப்பு செய்யூம் பணி தனியார் மயமாக்கப்பட்டும், இன்று வரை பல தெருவிளக்குகள் எரியாமல் உள்ள நிலையே நீடிக்கிறது. எனவே பராமரிப்பு பணிகளை எடுத்துள்ள நிறுவனத்தினரை அழைத்து, அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நகரில் சேரும் குப்பைகளை தட்டுவதற்கு காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் பெருந்தகை ஹாஜி வாவு எஸ். செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் கடையக்குடி பகுதியில் நகராட்சிக்கு இலவசமாக வழங்கியுள்ள சர்வே எண் 278-ல் ஐந்தரை ஏக்கர் நிலத்தை சுற்றி, சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இவண்,
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.ஜஹாங்கிர்,
5வது வார்டு உறுப்பினர், காயல்பட்டினம் நகராட்சி. |