செய்தி: குப்பைத்தொட்டி இடமாற்றத்தால் பொதுமக்கள் அவதி! மக்களின் பொறுப்பற்ற தன்மையே இடமாற்றத்திற்குக் காரணம் என நகர்மன்ற உறுப்பினர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[30 October 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37932
எதற்கெடுத்தாலும் நகர் மன்றத்தையும் வார்டு உறுப்பினரையும் குறை கூறிக் கொண்டிருப்பதே சிலருக்கு வாடிக்கையான வாழ்க்கைமுறையாகும்! அவர்களை எந்தநாளும் திருத்தவேமுடியாது!
வார்டு உறுப்பினர் உங்களுக்கு சேவகர் என்றால் அவர் ஒரு "கை" தான் "மறுகை" மக்களாகிய நம்முடைய ஒத்துழைப்பாகும்,ஆக ‘இருகைககள்” சேர்ந்து தட்டினால்தான் தீர்வு என்ற ஒலி அதிரும். எந்த திறமையான ஆட்சியாக இருந்தாலும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அவ்வாட்சி வெற்ற்றி பெற்று வளம் கொழிக்கும்!
தற்போது “பந்து” வார்டு உரிப்பினரிர் கையில்தான் இருக்கிறது, அத்தெரு மக்களுக்கு தகுந்த பெரியவர்களை வைத்து அறிவுரை செய்து பொறுப்பற்ற தன்மையினால் குவியும் குப்பையும் அதனால் பரவும் கொசுவின் அபாயத்தின் பாதிப்பையும் அவர்கள் புரியும்படி சொல்லி செயல்பட வைப்பதுதான் சாதுர்ண்யம். அதை விட்டுவிட்டு தாங்களும் அவர்களோடு போட்டாபோட்டி போடுவது பொறுப்புள்ள உறுபினருக்கு அழகல்ல.!
அவர்களுக்குள்ள தொட்டியை அங்குள்ள பெரியவர்களின் உதவியுடனும் அழகான அறிவுரையுடனும் வைத்து பாருங்கள் பலன் அனைவரும் விரும்பபியதாகவே அமையும்..எப்பொழுதும் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. ஒரு சிலருக்காக மல்லுகட்டி இருப்பதைவிட அவர்கள் மனமும் எண்ணமும் அவர்களின் இயல்புநிலையை நினைத்து திருந்தும் அளவிற்கு சற்று விட்டுக்கொடுத்து போனால் பலரின் பாராட்டுதலை தாங்கள் பெறுவதுமட்டுமல்ல பொதுவாழ்வில் பொறுமையானது மிகப்பெரிய “புண்ணியபொக்கிஷம்” என்ற தத்துவத்திற்க்கோர் உதாரணமாக உங்கள் வாழ்க்கையும் அமையும் அல்லாஹ்வின் உதவியால்!
.நான் சார்ந்த வார்டு என்பதால் சற்று உரிமையாலும்,வயதாலும் உறுப்பினருக்கு அறிவுரை கூறியுள்ளேன் அதை ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கையில்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross